பொது செய்தி

தமிழ்நாடு

அண்ணா பல்கலை விவகாரம்: மந்திரியிடம் அமித்ஷா கிடுக்கி

Updated : நவ 24, 2020 | Added : நவ 22, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
சென்னை:அண்ணா பல்கலை விவகாரம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், நேரில் விளக்கம் அளித்தார். அவரிடம் பல கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்டு, அமித் ஷா பதில் பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்ணா பல்கலை கழக துணை வேந்தர் சுரப்பா மீது, 250 கோடி ரூபாய் ஊழல் புகார் எழுந்துள்ளது. பல்கலை கழக பணி நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக
 அண்ணா பல்கலை, விவகாரம், மந்திரியிடம், அமித்ஷா ,கிடுக்கி

சென்னை:அண்ணா பல்கலை விவகாரம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், நேரில் விளக்கம் அளித்தார்.

அவரிடம் பல கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்டு, அமித் ஷா பதில் பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்ணா பல்கலை கழக துணை வேந்தர் சுரப்பா மீது, 250 கோடி ரூபாய் ஊழல் புகார் எழுந்துள்ளது. பல்கலை கழக பணி நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, உயர் கல்வித் துறை வாயிலாக, ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், உயர் கல்வித் துறைக்கும், துணை வேந்தர் சுரப்பாவிற்கும் இடையிலான மோதல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், நேற்று சந்தித்தார்.

இந்த சந்திப்பு, 15 நிமிடங்கள் நடந்தது. அப்போது, அண்ணா பல்கலை பிரச்னை குறித்து, அமித் ஷாவிடம், அமைச்சர் அன்பழகன் விளக்கம் அளித்தார். உயர்கல்வி தொடர்பாக, மத்திய, மாநில அரசுகளிடையே உள்ள முரண்பாடுகளை களைவது குறித்தும், உயர் கல்வித் துறை அமைச்சர் வாயிலாக, சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

அதேநேரத்தில், பல்கலை விவகாரம் தொடர்பாக, பல கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்டு, அமைச்சர் அன்பழகனிடம் அமித் ஷா பதில் பெற்றதாகவும், அதன் வாயிலாக தன் சந்தேகங்களை, அவர் தீர்த்துக் கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
lalithavani - Varanasi,இந்தியா
24-நவ-202014:25:43 IST Report Abuse
lalithavani ஒரு நாள் உத்தமனாகவும் மறு நாள் கயவனாகவும் மாறும் தன்மை பெற்றால்தான் மனித மனம் ஒரு குரங்குன்னு சொன்னாங்க.
Rate this:
Cancel
lalithavani - Varanasi,இந்தியா
24-நவ-202014:23:35 IST Report Abuse
lalithavani உனக்கு எங்கள் ஆதரவு இல்லை என்று மத்தி வெளிப்படையாக சொல்லும் வரை பதவியை விட்டு விலக மீட்டார் போலிருக்கே. கலியுகம், தவறு செய்பவர்களுக்குதான் ஆதரவ பெருகுகிறது.
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
23-நவ-202018:56:12 IST Report Abuse
konanki ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனை கூட போடுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X