பொது செய்தி

தமிழ்நாடு

மலையோர மக்களே... யானைகள் கவனம்! வனத்துறை எச்சரிக்கை

Added : நவ 22, 2020
Share
Advertisement
பேரூர்:மலையடிவார கிராமங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட மலையடிவார பகுதிகளில், சில வாரங்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அந்த யானைகளை அடர் வனங்களுக்குள் விரட்டும் பணியில், வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், சர்க்கார்

பேரூர்:மலையடிவார கிராமங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட மலையடிவார பகுதிகளில், சில வாரங்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அந்த யானைகளை அடர் வனங்களுக்குள் விரட்டும் பணியில், வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், சர்க்கார் போராத்தி மற்றும் குப்பேபாளையத்தை சேர்ந்த இரண்டு மூதாட்டிகள் யானை தாக்கி பலியாகினர். இதையடுத்து, மலையடிவார கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவனமாக நடமாடுமாறு, வனத்துறை எச்சரித்துள்ளது.போளுவாம்பட்டி வனச்சரகர் ஆரோக்கியசாமி கூறியதாவது:மலையடிவார கிராமங்களில் நுழையும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ரோந்து செல்லும் வனத்துறை வாகனங்களையும், காட்டு யானைகள் தாக்கி வருகின்றன.வன ஊழியர்கள் உயிரை பணையம் வைத்தே, ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர். இது போன்ற நிலையில், மலையடிவார கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொது மக்கள், அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.தனியாக வெளியே செல்வதை தவிர்ப்பதுடன், கையில் ஒளிவிளக்குகளை எடுத்து செல்லவும். திறந்தவெளியில் படுத்து உறங்குவதை தவிர்க்க வேண்டும்.வனப்பகுதி அருகே உள்ள பட்டா நிலங்களில், அமர்ந்து மது அருந்த கூடாது. காட்டுயானைகள் தென்பட்டால், 91595 69126, 97514 23740, 97875 73759 ஆகிய எண்களில் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவும்.இவ்வாறு, அவர் கூறினார்.ஜாக்கிரதையா இருங்க! மலையடிவார கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொது மக்கள், அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தனியாக வெளியே செல்வதை தவிர்ப்பதுடன், கையில் ஒளிவிளக்குகளை எடுத்து செல்ல வேண்டும். திறந்தவெளியில் படுத்து உறங்குவதை தவிர்க்க வேண்டும். வனப்பகுதி அருகே உள்ள பட்டா நிலங்களில், அமர்ந்து மது அருந்த கூடாது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X