கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஹிந்து மகா சபா மாநில நிர்வாகி ஓசூரில் பட்டப்பகலில் படுகொலை

Added : நவ 22, 2020
Share
Advertisement
ஓசூர்: ஓசூரில் நடைபயிற்சி சென்ற, அகில பாரத ஹிந்து மகா சபா மாநில நிர்வாகி, மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், பாகலுார் சாலை, சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ், 46; அகில பாரத ஹிந்து மகா சபா மாநில செயலர். முன்னதாக, தமிழக வாழ்வுரிமை கட்சி, மாவட்ட செய்தி தொடர்பாளராக இருந்தார்.மேலும், 'வில்லங்கம்' என்ற

ஓசூர்: ஓசூரில் நடைபயிற்சி சென்ற, அகில பாரத ஹிந்து மகா சபா மாநில நிர்வாகி, மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், பாகலுார் சாலை, சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ், 46; அகில பாரத ஹிந்து மகா சபா மாநில செயலர். முன்னதாக, தமிழக வாழ்வுரிமை கட்சி, மாவட்ட செய்தி தொடர்பாளராக இருந்தார்.மேலும், 'வில்லங்கம்' என்ற பெயரில், மாத பத்திரிகை நடத்தி வந்தார்.தற்போது, 'ரியல் எஸ்டேட்' தொழில், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். தொழில் ரீதியாக, சிலருடன் பகை இருந்துள்ளது.சில மாதங்களாக, மொபைல் போனில் மிரட்டல் வந்ததால், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கேட்டிருந்தார். ஆனால், பாதுகாப்பு வழங்கப்படவில்லை.இந்நிலையில் நேற்று காலை, 8:00 மணிக்கு, சமத்துவபுரம் எதிரே அனுமந்த் நகரில், தன் அலுவலகம் அருகே நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார்.

அப்போது, காரில் வந்த ஆறு பேர், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால், அவரை ஓட ஓட விரட்டி, வெட்டி கொலை செய்து தப்பினர்.கிருஷ்ணகிரி எஸ்.பி., பண்டி கங்காதர், சம்பவ இடத்தை பார்வையிட்டார்.ஹட்கோ போலீசார் தனிப்படை அமைத்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.நாகராஜுக்கு, மஞ்சுளா என்ற மனைவி, ௨௩ வயதில் மகன், 21, ௧௭, ௧௨ வயதுகளில் மூன்று மகள்கள் உள்ளனர். ஓசூரில் மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில், பட்டப்பகலில் நடந்த கொலை, மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.''கொலை தொடர்பாக சில தகவல்கள் கிடைத்துள்ளன. குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவர்,'' என, எஸ்.பி., பண்டி கங்காதர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X