அரசியல் செய்தி

தமிழ்நாடு

தருமபுரம் ஆதீனத்திடம் திருநீறு பூசி உதயநிதி ஆசி

Added : நவ 22, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
மயிலாடுதுறை: மயிலாடுதுறை வந்த உதயநிதி, தருமபுரம் ஆதீனத்தை சந்தித்து, ஆசி பெற்றார். குருமகா சன்னி தானம், உதயநிதிக்கு திருநீறு பூசி, அருளாசி வழங்கினார்.தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, 'விடியலை நோக்கி- ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில், தேர்தல் பிரசாரப் பயணத்தை, தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி துவக்கி உள்ளார். நாகை மாவட்டம், திருக்குவளையில் கடந்த, 20ம் தேதி பிரசாரம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை வந்த உதயநிதி, தருமபுரம் ஆதீனத்தை சந்தித்து, ஆசி பெற்றார். குருமகா சன்னி தானம், உதயநிதிக்கு திருநீறு பூசி, அருளாசி வழங்கினார்.

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, 'விடியலை நோக்கி- ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில், தேர்தல் பிரசாரப் பயணத்தை, தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி துவக்கி உள்ளார். நாகை மாவட்டம், திருக்குவளையில் கடந்த, 20ம் தேதி பிரசாரம் துவங்கியபோது, கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாமல் கூட்டம் கூட்டியதற்காக, கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டார். இரண்டாவது நாளாக, நேற்று முன்தினம், நாகையில் பிரசாரம் செய்தபோது கைது செய்யப்பட்டு, இரவு விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து, மயிலாடுதுறையில், மாணவ -- மாணவியருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.நேற்று முன்தினம் இரவு, மயிலாடுதுறைக்கு வந்த உதயநிதி, தருமபுரம் ஆதின திருமடத்திற்கு சென்றார். அங்கு, ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமியை சந்தித்து, ஆசி பெற்றார்.குருமகா சன்னிதானம், உதயநிதிக்கு திருநீறு பூசி, அருளாசி வழங்கினார்.மூன்றாவது நாளாக, நேற்று மதியம் திருவெண்காட்டில் பிரசாரத்தை துவக்கிய உதயநிதி, மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலம் சென்றார்.

அங்கு, தஞ்சை சரக டி.ஐ.ஜி., ரூபேஷ்குமார் மீனா தலைமையிலான போலீசார், உதயநிதியை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.உடன் சென்ற, தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். சில மணி நேரங்களில், அனைவரும் விடுவிக்கப் பட்டனர்.தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள உதயநிதி, நேற்று முன்தினம் இரவு, சீர்காழி அருகே, திருவெண்காட்டில் தங்கினார்.நேற்று மதியம் பிரசாரத்தை தொடங்கினார். முன்னதாக அவருக்கு, திருவெண்காடு ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரர் கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
24-நவ-202005:59:55 IST Report Abuse
Bhaskaran சோ ஒருமுறை சொன்னதாவது ஹிந்து வாக்கு வங்கி என்று தமிழ்நாட்டில் உருவாகும் காலம் என்று ஒன்று வருமேயானால் வாக்கு வாங்குவதற்கு உடலெல்லாம் திருநீறும் நாமமும் போட்டு கொண்டு வாக்கு பிச்சை எடுக்க தயங்காதவர்கள் திமுகவினர் என்று
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
23-நவ-202023:48:21 IST Report Abuse
தமிழவேல் இரண்டு நாட்களுக்கு முன் இந்த ஆளு விபூதி வைத்துக் கொள்வதை மறுத்தார் என்ற வகையில் செய்தி வந்து வாங்கி கட்டிக்கொண்டார். இப்போது விபூதி பூசி ஆசீர்வாதம்.... இதற்கும் இங்கு பலர் வாதம் செய்கின்றனர். என்ன உலகம்..
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
23-நவ-202012:15:57 IST Report Abuse
Bhaskaran இவனது விஷங்களை நம்பும் தமிழகத்தில் ஆட்கள் இருக்கும்வரை இவிங்க குடும்பத்துக்கு என்ன கவலை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X