அரசியல் செய்தி

தமிழ்நாடு

பெண்கள் பற்றி தரக்குறைவான பேச்சு மன்னிப்பு கேட்டார் தி.மு.க., செயலர்

Added : நவ 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருச்சி: பெண்களை தரக்குறைவாக பேசிய விவகாரத்தில், திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க., செயலர், பகிரங்க மன்னிப்பு கேட்டார்.திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க., செயலர், காடுவெட்டி தியாகராஜன், 52. இவர், வெள்ளாளர் சமுதாயப் பெண்களைப் பற்றி, தரக்குறைவான வார்த்தைகளால் பேசினார். இந்தப் பேச்சின் ஆடியோ, சமூக வலைதளங்களில் பரவியது.இது, அந்தச் சமுதாயத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை

திருச்சி: பெண்களை தரக்குறைவாக பேசிய விவகாரத்தில், திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க., செயலர், பகிரங்க மன்னிப்பு கேட்டார்.

திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க., செயலர், காடுவெட்டி தியாகராஜன், 52. இவர், வெள்ளாளர் சமுதாயப் பெண்களைப் பற்றி, தரக்குறைவான வார்த்தைகளால் பேசினார். இந்தப் பேச்சின் ஆடியோ, சமூக வலைதளங்களில் பரவியது.இது, அந்தச் சமுதாயத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான புகாரின்படி, தியாகராஜன் மீது, காட்டுப்புத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து, அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றன.இந்நிலையில், நேற்று சோழிய வெள்ளாளர் சங்கம் மற்றும் வெள்ளாளர் முன்னேற்றச் சங்கத்தின் கூட்டம், திருச்சியில் நடந்தது. அங்கு, தி.மு.க., முதன்மைச் செயலர் நேருவுடன் வந்த தியாகராஜன், சமுதாயப் பெண்கள் பற்றி தவறாகப் பேசியதற்காக, பகிரங்க மன்னிப்பு கேட்டார்.அதை ஏற்றுக் கொண்ட சங்க நிர்வாகிகள், பிரச்னையை இத்துடன் முடித்துக் கொள்வதாக தெரிவித்தனர். அதே நேரத்தில், 'போலீசார் பதிவு செய்துள்ள வழக்கு, சட்டப்படி நடக்கும்' என, சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், வெள்ளாளர் சமுதாயத்தின் சில பிரிவுகள், இந்த மன்னிப்பை ஏற்க முடியாது என, கண்டனம் தெரிவித்துள்ளன. மீண்டும் சர்ச்சைவெள்ளாளர் சமுதாயப் பெண்களை தவறாக பேசி மன்னிப்பு கேட்ட தியாகராஜன், வன்னியர் சமுதாயப் பெண்ணை, மிகவும் கீழ்த்தரமாக திட்டிய ஆடியோ, நேற்று காலை முதல், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது, தி.மு.க.,வினர் மத்தி யில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.'நம்ம சங்கத்து ஆளை ஜெயிக்க வைத்தவர்'திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க., செயலர் காடுவெட்டி தியாகராஜன், முன்னாள் அமைச்சர் நேருவின் சமுதாயத்தைச் சேர்ந்த, அ.தி.மு.க., பிரமுகர் ரவிச்சந்திரனை, மூன்று முறை யூனியன் சேர்மன் ஆக்க உதவியதாக, நேரு பேசிய ஆடியோ தற்போது பரவி வருகிறது.

இது குறித்து, தி.மு.க.,வினர் கூறியதாவது:திருச்சி மாவட்டத்தில் முன்பு நடந்த ரெட்டியார் நலச் சங்க கூட்டத்தில், தான் சார்ந்த சமுதாயம் என்பதால், தி.மு.க., முதன்மைச் செயலர் நேருவும் பங்கேற்றார். வடக்கு மாவட்டச் செயலர் தியாகராஜனும் பங்கேற்றுள்ளார்.அதில் பேசிய நேரு, 'தொட்டியம் அ.தி.மு.க., பிரமுகர் ரவிச்சந்திரன், நம் சமுதாயத்தைச் சார்ந்தவர். அவர், மூன்று முறை யூனியன் சேர்மனாக உதவியவர் தியாகராஜன்.அவர், ரெட்டியார் சமுதாயத்துக்கு என்றும் உறுதுணையாக இருப்பார். அவருக்கு எதிர்காலத்தில் நீங்களும் உறுதுணையாக இருந்தால், இன்னும் நிறைய உதவிகளை சமுதாயத்துக்குச் செய்வார்.

ஆகையால் தான், அவரை மேடையில் அமர வைத்துள்ளேன்' என தெரிவித்துள்ளார்.தி.மு.க., முதன்மைச் செயலரே, அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவரை யூனியன் சேர்மன் ஆக்கியவர் என, தி.மு.க., மாவட்டச் செயலருக்கு பாராட்டு தெரிவிப்பது, எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. தி.மு.க.,வுக்குத் துரோகம் செய்வது போல் செயல்பட்டுள்ள தியாகராஜனுக்கு, நேருவே பாராட்டு தெரிவிக்கிறார்.இதை என்னவென்று சொல்வது. அவருக்கு கட்சித் தலைமையில் செல்வாக்கு உள்ளது. எப்படி வேண்டுமானாலும் பேசலாம், செயல்படலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
24-நவ-202006:02:59 IST Report Abuse
Bhaskaran திமுகவினர் அப்படி பேசாமல் இருந்தால்தான் ஆச்சரியம் .அரசியலில் ஜெ வயும் அவர் சார்ந்த சமுதாயத்தையும் இந்த நாலாம் தர பேச்சாளர்கள் பேசாத பேச்சுகளா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X