பொது செய்தி

தமிழ்நாடு

ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
திருநெல்வேலி: கோவில்பட்டி ராணுவ வீரர் உடல், சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி, 34; ராணுவத்தில் நாயக்காக, காஷ்மீர் லடாக்கில் பணியாற்றிய நிலையில், நவ., 18ல் நடந்த விபத்தில் பலியானார்.இவரது உடல், டில்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வழியாக, நேற்று மாலை தெற்கு திட்டங்குளத்திற்கு

திருநெல்வேலி: கோவில்பட்டி ராணுவ வீரர் உடல், சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி, 34; ராணுவத்தில் நாயக்காக, காஷ்மீர் லடாக்கில் பணியாற்றிய நிலையில், நவ., 18ல் நடந்த விபத்தில் பலியானார்.இவரது உடல், டில்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வழியாக, நேற்று மாலை தெற்கு திட்டங்குளத்திற்கு கொண்டு வரப்பட்டது.மனைவி தமயந்தி, மகள்கள் கன்யா, 7, வைஷ்ணவி, 5, ஒரு வயது மகன் பிரதீப்ராஜ், தந்தை கந்தசாமி மற்றும் உறவினர்கள் கதறியழுதபடி அஞ்சலி செலுத்தினர்.

அங்கிருந்து, அருகே உள்ள மயானத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.எட்டு ராணுவ வீரர்கள், மூன்று முறை துப்பாக்கி குண்டுகள் முழங்க, மரியாதை செலுத்தினர். பின், அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.முன்னதாக, கருப்பசாமி உடலுக்கு, செய்தித் துறை அமைச்சர் ராஜு, கலெக்டர் செந்தில் ராஜ், எஸ்.பி., ஜெயகுமார் மற்றும் ராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X