அரசியல் செய்தி

தமிழ்நாடு

திருப்பூரில் பா.ஜ., வேல் யாத்திரை

Updated : நவ 23, 2020 | Added : நவ 22, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
திருப்பூர்: திருப்பூரில், தடையை மீறி, வேல் யாத்திரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்றதாக நடிகை குஷ்பு, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட, 1,000க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூரில் நேற்று, பா.ஜ., சார்பில் வேல் யாத்திரை பொதுக்கூட்டம் நடந்தது.'வேல் யாத்திரை மற்றும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதியில்லை' எனக் கூறி, நடிகை குஷ்பு, முன்னாள் மத்திய
 திருப்பூரில் பா.ஜ., வேல் யாத்திரை

திருப்பூர்: திருப்பூரில், தடையை மீறி, வேல் யாத்திரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்றதாக நடிகை குஷ்பு, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட, 1,000க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூரில் நேற்று, பா.ஜ., சார்பில் வேல் யாத்திரை பொதுக்கூட்டம் நடந்தது.'வேல் யாத்திரை மற்றும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதியில்லை' எனக் கூறி, நடிகை குஷ்பு, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட கட்சி நிர்வாகிகள் மற்றும், 1,000க்கும் மேற்பட்ட தொண்டர்களை, போலீசார் கைது செய்தனர்.முன்னதாக, கூட்டத்தில், நடிகை குஷ்பு பேசிய தாவது:மக்கள் பிரச்னையை தீர்க்கும் தலைவராக மோடி உள்ளார்.

பல திட்டங்களை, தமிழகத்துக்கு பா.ஜ., அரசு தந்துள்ளது. ஆளும் கட்சி என்ன செய்தாலும் அதை எதிர்க்க வேண்டும் என்பது தான், காங்கிரஸ் கொள்கை. புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக, நான் பேசியபோது எனக்கு எதிர்ப்பு கிளம்பியது.அதை எதிர்க்கும் தி.மு.க.,வில் எத்தனை பேர் குழந்தைகள் அரசு பள்ளியில் படிக்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும்.வேல் யாத்திரை அவசியமா என்கின்றனர். அவசியம் மட்டுமல்ல... அத்தியாவசியம். தி.மு.க., தலைவர்கள் வீட்டில் யாரும் கோவிலுக்கு போவதில்லையா? மேற்கு வங்கத்திலும், தமிழகத்திலும் பா.ஜ., நிச்சயம் வெற்றி பெறும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
24-நவ-202006:04:08 IST Report Abuse
Bhaskaran வேல் யாத்திரைக்குமுன் குத்தாட்டம் அருமையாக இருந்தது
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
23-நவ-202023:49:37 IST Report Abuse
தமிழவேல் போட்டோவைக் காணோமே... போட்டோ இருந்தால் கோர்ட் கூறியதுபோல் அனைவரும் மாஸ்க் அணிந்திருக்கின்றார்களா என்றாவது பார்க்கலாம்.
Rate this:
Cancel
Raj - Chennai,இந்தியா
23-நவ-202018:03:14 IST Report Abuse
Raj இந்து மதத்தை இழிவு செய்தவர்களை மன்னிப்பு கேட்க வைப்போம். வெற்றி வேல், வீர வேல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X