சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காவிரியில் மூழ்கிய மூவர் சடலமாக பெண் மீட்பு

Added : நவ 22, 2020
Share
Advertisement
ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரி யாற்றில் மூழ்கிய பெண் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவரது மகன், மகள் கிடைக்கவில்லை.சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியைச் சேர்ந்தவர் ரியாசுதீன், 46; பழைய கார் உள்ளிட்ட வாகனங்களை வாங்கி, விற்கும் தொழில் செய்து வருகிறார்.குடும்பத்தினர் ஐந்து பேருடன், மாருதி ஸ்விப்ட் காரில், நேற்று ஒகேனக்கல் சென்றார். பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து, மாலை, 4:30,

ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரி யாற்றில் மூழ்கிய பெண் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவரது மகன், மகள் கிடைக்கவில்லை.சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியைச் சேர்ந்தவர் ரியாசுதீன், 46; பழைய கார் உள்ளிட்ட வாகனங்களை வாங்கி, விற்கும் தொழில் செய்து வருகிறார்.

குடும்பத்தினர் ஐந்து பேருடன், மாருதி ஸ்விப்ட் காரில், நேற்று ஒகேனக்கல் சென்றார். பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து, மாலை, 4:30, மணிக்கு ஆலம்பாடி அருகே, நாடார் கொட்டகை பகுதிக்கு சென்று குளித்தனர்.ரியாசுதீன், மனைவி அபிதா, 38, மகள் அபாஸ் பாத்திமா, 14, மகன் முகமது ரபாஸ், 10, உள்ளிட்ட நான்கு பேரும், திடீரென தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.

கரையில் இருந்த மூத்த மகன் முகமது அஸ்வாப், 18, ரியாசுதீனை மட்டும் காப்பாற்றி கரை சேர்த்துள்ளார். தகவல் கிடைத்து சென்ற ஒகேனக்கல் போலீசார், தீயணைப்பு வீரர்கள், பரிசல் ஓட்டிகளின் உதவியோடு மூவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.இதில், அபிதாவை, ஆலம்பாடி பரிசல் துறை அருகே, மாலை, 6:30 மணிக்கு சடலமாக மீட்டனர். அபாஸ் பாத்திமா, முகமது ரபாஸ் கிடைக்கவில்லை. இரவானதால் தேடும் பணியை நிறுத்தினர்.இன்று காலை, மீட்பு பணியை தொடர உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X