சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கந்து வட்டி கொடுமை: தந்தை, மகள் சாவு

Added : நவ 22, 2020
Share
Advertisement
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே, கந்துவட்டி கொடுமையால் விஷம் குடித்த தந்தை, மகள் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த நாகந்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன், 38; விவசாயி. இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன், அதே ஊரில் டீக்கடை நடத்தி வரும் ராஜசேகர், 45, என்பவர் மூலமாக, திண்டிவனம் எடையான்குளத்தை சேர்ந்த சம்பத், 44 என்பவரிடம், வெற்று

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே, கந்துவட்டி கொடுமையால் விஷம் குடித்த தந்தை, மகள் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த நாகந்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன், 38; விவசாயி. இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன், அதே ஊரில் டீக்கடை நடத்தி வரும் ராஜசேகர், 45, என்பவர் மூலமாக, திண்டிவனம் எடையான்குளத்தை சேர்ந்த சம்பத், 44 என்பவரிடம், வெற்று பத்திரத்தில் கையெழுத்து போட்டு, 25 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார்.'இந்தத் தொகையை வட்டியுடன் சேர்த்து, 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டும். இல்லாவிட்டால், பத்திரத்தில், 2 லட்சம் ரூபாய் என எழுதி, கோர்ட்டில் வழக்கு போட்டு, உன் சொத்துகளை ஜப்தி செய்து கொள்வேன்' என, அய்யப்பனை, சம்பத் உள்ளிட்ட இருவரும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த அய்யப்பன், கடந்த, 20ம் தேதி மாலை, தன் வீட்டில் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து, வாந்தி எடுத்தார். அப்போது, அங்கு விளையாடிக்கொண்டிருந்த அவரது மகள் ஆர்த்தீஸ்வரி, 7, விஷம் கலந்திருப்பது தெரியாமல், மீத குளிர்பானத்தை குடித்து மயங்கி விழுந்தார். இருவரையும் மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று முன்தினம் இரவு, அய்யப்பன், ஆர்த்தீஸ்வரி இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இருவரின் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது, கந்து வட்டி வழக்கு பதிந்து, கைது செய்யக் கோரி, நேற்று மாலை, மருத்துவமனையில் உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் பேச்சு நடத்தி, வழக்கில் ஒருவரை கைது செய்துள்ளதாகவும், மற்றொருவரை உடனே கைது செய்வதாக கூறி சமாதானம் செய்தனர். இதையேற்று, உடல்களை இன்று பெற்றுக் கொள்வதாக கூறி, இரவு, 7.00 மணிக்கு கலைந்து சென்றனர்.அய்யப்பன் மனைவி மங்கையர்கரசி புகாரின்படி, தற்கொலைக்கு துாண்டியதாக வழக்குப் பதிந்த போலீசார், ராஜசேகரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X