சம்பவம் செய்தி

தமிழ்நாடு

15 வயது சிறுமிக்கு பிரசவம் சிசுவை புதைத்த மூவர் கைது

Added : நவ 22, 2020
Share
Advertisement
குளித்தலை:நு குளித்தலை அருகே, 15 வயது பள்ளி சிறுமிக்கு பிரசவமான நிலையில், இறந்து பிறந்த சிசுவை புதைத்த, காதலனின் பெற்றோர் உட்பட, மூவரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த, கருப்பத்துார் பஞ்., வேங்காம்பட்டி காலனியைச் சேர்ந்த, 15 வயது சிறுமி, 10ம் வகுப்பு படிக்கிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித், 21; கோவை தனியார் கம்பெனி மெக்கானிக். சிறுமியிடம் திருமண

குளித்தலை:நு குளித்தலை அருகே, 15 வயது பள்ளி சிறுமிக்கு பிரசவமான நிலையில், இறந்து பிறந்த சிசுவை புதைத்த, காதலனின் பெற்றோர் உட்பட, மூவரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த, கருப்பத்துார் பஞ்., வேங்காம்பட்டி காலனியைச் சேர்ந்த, 15 வயது சிறுமி, 10ம் வகுப்பு படிக்கிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித், 21; கோவை தனியார் கம்பெனி மெக்கானிக். சிறுமியிடம் திருமண ஆசை காட்டி, உறவு கொண்டதில், அவர் கர்ப்பமடைந்தார்.கடந்த, 17ல், முசிறி தனியார் மருத்துவமனையில் ரஞ்சித் பெற்றோர், சிறுமியை அனுமதித்தனர். அங்கு பெண் குழந்தை இறந்து பிறந்தது.

சிறுமி வீட்டுக்கு சென்று விட்டார். அவருக்கு உடல்நிலை பாதிக்கவே, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, அடுத்த நாள் அழைத்து சென்றனர்.பரிசோதனையில், பிரசவம் நடந்தது தெரியவரவே, குளித்தலை மகளிர் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. சிறுமியிடம் புகார் பெற்று, ரஞ்சித், அவர் தந்தை நல்லதம்பி, 50, தாய் சந்திரா, 45, மாமன் முத்துசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.பிறந்த பெண் சிசுவை, ரஞ்சித் சகோதரர் ரமேஷ், குளித்தலை கடம்பர் கோவில் ஆற்றங்கரை மயானத்தில், புதைத்தது தெரியவந்தது.

நேற்று மாலை, போலீசார் முன்னிலையில், சிசு சடலத்தை தோண்டி எடுத்து, கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.நல்லதம்பி, சந்திரா, ரமேஷ் ஆகியோரை, மகளிர் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ரஞ்சித், முத்துசாமியை தேடி வருகின்றனர். சிறுமிக்கு, கரூர் அரசு மருத்துவமனையில், தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X