அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதனை அடுத்து ஜனநாயகக் கட்சி சார்பாக ஜோ பைடன் மாபெரும் வெற்றி பெற்று 306 நாடாளுமன்ற தொகுதிகளைப் பிடித்தார். வரும் ஜனவரி 20ஆம் தேதி அவர் அமெரிக்க அதிபராகப் பதவியேற்க உள்ளார். துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவி ஏற்க உள்ளார்.

உலக நாட்டுத் தலைவர்கள் பலர் ஜோ பைடனுக்குப் பாராட்டு தெரிவித்த நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பாராட்டு தெரிவிக்கவில்லை. உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றான ரஷ்யா, ஜோ பைடனை அங்கீகரிக்கவில்லை என்று ஊடகங்கள் கூறிவந்தன.இந்நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பில் விளாடிமிர் புடினிடம் இந்த கேள்வி எழுப்பப்பட்டது.
இதுகுறித்து கூறிய அவர் முன்னாள் ரஷ்ய அதிபர் கிரெம்லின் அறிவுரைப்படி தான் ஜோ பைடனை தான் வாழ்த்தவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் அமெரிக்க- ரஷ்ய உறவு பாதிக்கப்படுமா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, அது ஏற்கனவே பாதிக்கப்பட்டுதான் உள்ளது என்று விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
இது உலக நாட்டுத் தலைவர்கள் மத்தியில் விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது.ஜோ பைடன் உடன் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக விளாடிமிர் புடின் மேலும் தெரிவித்தார். அமெரிக்க மக்கள்மீது நம்பிக்கை வைத்திருக்கும் யாருடன் வேண்டுமானாலும் தான் சேர்ந்து பணி செய்யத் தயாராக உள்ளதாக கூறினார்.

புடின் ஆட்சி அமைக்க உள்ள அதிபரை எதிர்க்கட்சி அங்கீகரித்தால் தான் அவர் அந்த பதவிக்குத் தகுதியானவர் என்று பொருள். மேலும் சட்டத்துக்கு உட்பட்டு அமெரிக்க அதிபர் வெற்றி பெற்றிருப்பது அவசியம் என்று சூசகமாக புடின் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜோ பைடன் சட்டவிரோதமாக செயல்பட்டு வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி செய்து வெற்றி பெற்றார் என்று முன்னதாக விமர்சித்திருந்தார். மேலும் ஜோ பைடன் வெற்றியை டிரம்ப் இன்னும் அங்கீகரிக்கவில்லை. இதனை மறைமுகமாக குறிப்பிட்டு விளாடிமிர் புடின் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE