சம்பவம் செய்தி

தமிழ்நாடு

3.2 கிலோ தங்கம் திருச்சியில் பறிமுதல்

Added : நவ 22, 2020
Share
Advertisement
திருச்சி: துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள, 3.2 கிலோ தங்கத்தை, திருச்சி கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடான துபாயில் இருந்து, திருச்சி வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக, கஸ்டம்ஸ் வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.நேற்று அதிகாலை, துபாயில் இருந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த

திருச்சி: துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள, 3.2 கிலோ தங்கத்தை, திருச்சி கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடான துபாயில் இருந்து, திருச்சி வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக, கஸ்டம்ஸ் வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.நேற்று அதிகாலை, துபாயில் இருந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணியரிடம், கஸ்டம்ஸ் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, தஞ்சை, அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த, அகமது நபீஸ், 32, திருச்சியைச் சேர்ந்த ரபீஸ் அகமதுல்லா, 40, ஆகிய இருவரும், தங்களின் உடைகளில், 'பேஸ்ட்' வடிவில் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இருவரையும் கைது செய்து, 3 கிலோ, 205 கிராம் தங்கத்தை, கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு, 1.08 கோடி ரூபாய்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X