பொது செய்தி

தமிழ்நாடு

மேற்கு தொடர்ச்சி மலையில் 14 அரிய வகை தவளைகள் : ஆய்வில் தகவல்

Added : நவ 22, 2020
Share
Advertisement
மூணாறு: மேற்கு தொடர்ச்சி மலையில் மட்டும் காணப்படும் 14 அரிய தவளைகளில் 3 வகை மூணாறில் உள்ளது.டில்லி பல்கலை பேராசிரியர் பிஜூதாஸ் நீர் மற்றும் நிலத்தில் வாழும் உயிரினம் குறித்து 2014ல் மேற்கு தொடர்ச்சி மலையில் ஆய்வு நடத்தினார். டேன்சிங் ப்ராக்' வகையை சேர்ந்த 14 அரிய வகை தவளைகளை கண்டறிந்தார். இதில் மூணாறு மேற்கு தொடர்ச்சி மலையில் நிக்ராவென்ஷிஸ், அடோனிஸ், பிரிட்ஷியூஸ் ஆகிய

மூணாறு: மேற்கு தொடர்ச்சி மலையில் மட்டும் காணப்படும் 14 அரிய தவளைகளில் 3 வகை மூணாறில் உள்ளது.

டில்லி பல்கலை பேராசிரியர் பிஜூதாஸ் நீர் மற்றும் நிலத்தில் வாழும் உயிரினம் குறித்து 2014ல் மேற்கு தொடர்ச்சி மலையில் ஆய்வு நடத்தினார். டேன்சிங் ப்ராக்' வகையை சேர்ந்த 14 அரிய வகை தவளைகளை கண்டறிந்தார். இதில் மூணாறு மேற்கு தொடர்ச்சி மலையில் நிக்ராவென்ஷிஸ், அடோனிஸ், பிரிட்ஷியூஸ் ஆகிய மூன்று வகை தவளைகள் இருப்பது தெரியவந்தது.ஆய்வு நடத்தியவர் தவளைகளின் புகைப்படம், தகவல்களை சமீபத்தில் வெளியிட்டார்.

சாதாரண தவளைகளை காட்டிலும் மாறுபட்ட குணாதிசயங்களை கொண்ட இந்த தவளைகள் வனங்களிலுள்ள வற்றாத ஓடைகளில் வாழ்கின்றன. சாதாரண தவளைகள் இணைகளை சப்தமிட்டு அழைக்கும். ஓடை நீரோட்டத்தால் சப்தம் கேட்காது என்பதால் 'டேன்சிங் ப்ராக்' வகை தவளைகள் கால்களை துாக்கி அசைத்து இணைகளை கவருவதோடு, எதிரிகளையும் அப்படியே எச்சரிக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X