பொது செய்தி

தமிழ்நாடு

வங்க கடலில் புயல்: மீனவர்களுக்கு தடை

Added : நவ 22, 2020
Share
Advertisement
ராமேஸ்வரம்: வங்க கடலில் உருவான புயல் சின்னத்தால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க மீன்துறையினர் தடை விதித்தனர்.தென்கிழக்கு வங்க கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்கிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் இலங்கை பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசி கனமழை பெய்யும் என வானிலை

ராமேஸ்வரம்: வங்க கடலில் உருவான புயல் சின்னத்தால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க மீன்துறையினர் தடை விதித்தனர்.

தென்கிழக்கு வங்க கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்கிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் இலங்கை பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசி கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால் நேற்று (நவ.,22) முதல் பாம்பன் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்துறை தடை விதித்தது. இதனால் மீன்பிடிக்க ஆயத்தமான 300க்கும் மேலான விசை, நாட்டுபடகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இன்று (நவ.,23) முதல் ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மறுஅறிவிப்பு வரும்வரை தடை தொடரவுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X