பொது செய்தி

தமிழ்நாடு

எத்தனை நாளில் மின் இணைப்பு? இணையதளத்தில் விபரம் வெளியீடு!

Added : நவ 22, 2020
Share
Advertisement
சென்னை: புதிய மின் இணைப்பு, மின் இணைப்பு இடமாற்றம் உள்ளிட்ட சேவைகள், எத்தனை நாட்களுக்குள் செய்து தரப்படும் என்ற விபரத்தை, பொது மக்கள் தெரிந்துக் கொள்வதற்காக, மின் வாரியம் இணைய தளத்தில் வெளியிட்டுஉள்ளது.தமிழகத்தில், வீடு, தொழிற்சாலை உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும், புதிய மின் இணைப்பு பெற விரும்புவோர், மின் வாரியத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். புதிய மின்

சென்னை: புதிய மின் இணைப்பு, மின் இணைப்பு இடமாற்றம் உள்ளிட்ட சேவைகள், எத்தனை நாட்களுக்குள் செய்து தரப்படும் என்ற விபரத்தை, பொது மக்கள் தெரிந்துக் கொள்வதற்காக, மின் வாரியம் இணைய தளத்தில் வெளியிட்டுஉள்ளது.

தமிழகத்தில், வீடு, தொழிற்சாலை உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும், புதிய மின் இணைப்பு பெற விரும்புவோர், மின் வாரியத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். புதிய மின் இணைப்பு உள்ளிட்ட பணிகளை, குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கும் வகையில், ஒவ்வொரு சேவைக்கும், மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தனித்தனி காலக்கெடு நிர்ணயித்து உள்ளது.மின் இணைப்பு கோரும் இடத்தில், ஏற்கனவே மின் சாதனங்கள் இருக்கும்பட்சத்தில், 30 நாட்களுக்குள், இணைப்பு வழங்க வேண்டும். மின் கம்பம், டிரான்ஸ்பார்மர் போன்றவை நிறுவ வேண்டும் எனில், அதற்கென அவகாசம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.அந்த விபரம், பலருக்கு தெரியாத நிலையில், விண்ணப்பதாரரிடம், 'ஆதாயத்தை' எதிர்பார்த்து, மின் இணைப்பு வழங்க, வேண்டுமென்றே தாமதம் செய்யப்படுவதாக புகார் எழுகின்றன.

தற்போது, விரைந்து மின் இணைப்பு வழங்க, கூடுதல் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், புதிய மின் இணைப்பு, மின் இணைப்பு இடமாற்றம், தற்காலிக மின் இணைப்பு, மின் இணைப்பு மாற்றம், மின் கட்டண வீதம் மாற்றம் ஆகிய சேவைகள், எத்தனை நாட்களுக்குள் செய்து தரப்படும் என்ற விபரத்தை, பொது மக்கள் தெரிந்து கொள்வதற்காக, அவற்றை மின் வாரியம், இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.மேற்கண்ட சேவைகளை, குறிப்பிட்ட அவகாசத்திற்குள் செய்ய தவறும்பட்சத்தில், தாமதம் ஏற்படும் ஒவ்வொரு நாளுக்கும், 100 ரூபாயும், அதிபட்சம், 1,000 ரூபாயும் மின் வாரியத்திற்கு அபராதம் விதிக்கும் வகையில், ஆணையத்தின் விதிகள் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X