முதல்வர் அடிக்கல்; பணியோ தாமதம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
திருப்பூர்:முருகம்பாளையத்தில் ஊராட்சி அலுவலகம் செயல்பட்ட இடத்தில், தரை தளம் மற்றும் நான்கு தளங்களுடன் கூடிய திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல அலுவலக கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்காக, 2.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.கடந்த 6ம் தேதி திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் பழனிசாமி இக்கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டினார். புதிய கட்டடம் கட்டும்

திருப்பூர்:முருகம்பாளையத்தில் ஊராட்சி அலுவலகம் செயல்பட்ட இடத்தில், தரை தளம் மற்றும் நான்கு தளங்களுடன் கூடிய திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல அலுவலக கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்காக, 2.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.கடந்த 6ம் தேதி திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் பழனிசாமி இக்கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டினார். புதிய கட்டடம் கட்டும் பணிக்கு ஏதுவாக முன் இருந்த கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. அடிக்கல் நாட்டப்பட்டு இரு வாரங்களுக்கு மேலாகியும் கட்டுமானப் பணி துவங்கப்படாமல் உள்ளது.மாநகராட்சி அலுவலர்கள் கூறுகையில், 'தீபாவளி விடுமுறைக்குச் சென்ற தொழிலாளர்கள் முழு அளவில் மீண்டும் பணிக்குத் திரும்பவில்லை. பணி துவங்குவதில் தாமதமானது. தொழிலாளர்கள் இரண்டொரு நாளில் பணிக்குத் திரும்புவர். உடனடியாகப் பணி துவங்கி விரைவில் முடிக்கப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X