பொது செய்தி

தமிழ்நாடு

நிலுவை பத்திரங்களை திருப்பி கொடுக்க ஆய்வு

Added : நவ 22, 2020
Share
Advertisement
சென்னை: சார் - பதிவாளர்கள் நிலையில், பல்வேறு காரணங்கள் அடிப்படையில், நிலுவையில் வைக்கப்பட்டுள்ள பத்திரங்களை ஆய்வு செய்து, உரியவர்களுக்கு திருப்பி கொடுக்கும் நடவடிக்கையை, பதிவுத்துறை முடுக்கி விட்டுஉள்ளது.தமிழகத்தில் பத்திரப்பதிவு பணிகள், 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இதனால், பதிவு முடிந்த அதே நாளில், பத்திரங்களை திருப்பி கொடுக்க வேண்டும். ஆனால், பல

சென்னை: சார் - பதிவாளர்கள் நிலையில், பல்வேறு காரணங்கள் அடிப்படையில், நிலுவையில் வைக்கப்பட்டுள்ள பத்திரங்களை ஆய்வு செய்து, உரியவர்களுக்கு திருப்பி கொடுக்கும் நடவடிக்கையை, பதிவுத்துறை முடுக்கி விட்டுஉள்ளது.

தமிழகத்தில் பத்திரப்பதிவு பணிகள், 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இதனால், பதிவு முடிந்த அதே நாளில், பத்திரங்களை திருப்பி கொடுக்க வேண்டும். ஆனால், பல இடங்களில் சார் - பதிவாளர்கள் உரிய காரணங்கள் இன்றி, பத்திரங்களை திருப்பித் தரமால் நிலுவையில் வைக்கின்றனர்.இதுபோன்ற பிரச்னைகளால், பதிவுத்துறைக்கு வருவாய் பாதிக்கப்படுவதாக புகார்கள் கூறப்படுகின்றன. சமீபத்தில் நடந்த அமைச்சர் தலைமையிலான ஆய்வு கூட்டத்திலும், இதுபற்றி விவாதிக்கப் பட்டது.

இது குறித்து, பதிவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:நிலுவை பத்திரங்களின் உண்மை நிலவரத்தை நேரில் ஆய்வு செய்ய, கூடுதல் ஐ.ஜி.,க்கள், டி.ஐ.ஜி.,க்களுக்கு, பதிவுத்துறை தலைவர் சங்கர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, நான்கு கூடுதல் ஐ.ஜி.,க்களும் தலா, ஒன்பது சார் - பதிவாளர் அலுவலகங்களை ஆய்வு செய்ய வேண்டும்.இதே போன்று, ஒன்பது டி.ஐ.ஜி.,க்கள் தலா, ஒன்பது சார் - பதிவாளர் அலுவலகங்களை நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.

நிலுவை பத்திரங்களுடன், அந்தந்த அலுவலக நிலை, சூழல் குறித்தும் ஆய்வு செய்ய, பதிவுத்துறை தலைவர் அறிவுறுத்தி உள்ளார்.வரும், 25, 26, 27ம் தேதிகளில், இந்த ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதனால், வேண்டுமென்றே நிலுவையில் வைக்கப்பட்ட பத்திரங்கள், உரியவர்களுக்கு கிடைக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X