வழுக்கும் சாலை... வாகனம் காலி

Added : நவ 22, 2020
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மங்கலம் ரோடு, எஸ்.ஆர்., நகர் வடக்கு பகுதியில் நுாற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இங்குள்ள பெரும்பாலான வீதிகளில் தார் ரோடு வசதியில்லை. பெருமளவு களிமண் பூமியாக இப்பகுதி உள்ளது.லேசாக மழை பெய்தால் கூட ரோட்டில் மழை நீர் தேங்கி நின்று, சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. ரோடு வழுக்குவது வழக்கமாக உள்ளது. மழை நாட்களில் எச்சரிக்கையுடன் மட்டுமே இங்கு

திருப்பூர்:திருப்பூர் மங்கலம் ரோடு, எஸ்.ஆர்., நகர் வடக்கு பகுதியில் நுாற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இங்குள்ள பெரும்பாலான வீதிகளில் தார் ரோடு வசதியில்லை. பெருமளவு களிமண் பூமியாக இப்பகுதி உள்ளது.லேசாக மழை பெய்தால் கூட ரோட்டில் மழை நீர் தேங்கி நின்று, சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. ரோடு வழுக்குவது வழக்கமாக உள்ளது. மழை நாட்களில் எச்சரிக்கையுடன் மட்டுமே இங்கு வாகனங்களிலும், நடந்தும் செல்ல முடியும்.மெதுவாகச் செல்லும் வாகனங்கள் கூட பல சமயங்களில் ரோட்டில் உள்ள சகதியால் வழுக்கி சிறு விபத்துகள் ஏற்படுகிறது.தொடர்ந்து சில நாட்களாக பெய்த மழையால், எஸ்.ஆர்., நகர் வடக்கு பகுதியில் அனைத்து ரோடுகளும் வழுக்கு சாலையாக மாறி உள்ளது.நேற்று குடிநீர் லோடு கொண்டு சென்ற லாரி ஒன்று, எதிரே வந்த காருக்கு வழி விட்டு ஓரமாக நிறுத்தப்பட்டது. ஆனால், எதிரே வந்த கார் ரோட்டில் இருந்த சேற்றில் வழுக்கிச் சென்று லாரியுடன் பக்கவாட்டில் உரசி, காருக்கு சேதம் ஏற்பட்டது.இதுபோல் தொடர்ந்து இப்பகுதியினர் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். இப்பகுதிக்கு உரிய முறையில் தார் ரோடு வசதி ஏற்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X