பார்வைக்கா... பயன்படுத்தவா! வீணாகும் குப்பைத்தொட்டிகள்

Added : நவ 22, 2020
Share
Advertisement
பல்லடம்:பல்லடம் அடுத்த கரைப்புதுார் ஊராட்சியில், 20 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். ஊராட்சிக்குட்பட்ட அருள்புரம் பகுதியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தருவிக்கப்பட்ட, 20க்கும் மேற்பட்ட குப்பை தொட்டிகள் பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்பட்டு வருகின்றன.இவை துருப்பிடித்து வீணாவதற்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து, குப்பைகளை முழுமையாக அகற்ற வேண்டும். கரைப்புதுார்,

பல்லடம்:பல்லடம் அடுத்த கரைப்புதுார் ஊராட்சியில், 20 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். ஊராட்சிக்குட்பட்ட அருள்புரம் பகுதியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தருவிக்கப்பட்ட, 20க்கும் மேற்பட்ட குப்பை தொட்டிகள் பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்பட்டு வருகின்றன.இவை துருப்பிடித்து வீணாவதற்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து, குப்பைகளை முழுமையாக அகற்ற வேண்டும். கரைப்புதுார், பல்லடம் ஒன்றியத்திலேயே பெரிய ஊராட்சி. மக்கள் தொகைக்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகள் இல்லை. குப்பைகள் மலைபோல் தேங்கி கிடக்கின்றன. பிளாஸ்டிக், காய்கறி, இறைச்சி கழிவுகள் என, தேங்கி கிடக்கும் குப்பைகளால், பொதுமக்களுக்கு நோய் தொற்று அபாயம் ஏற்பட்டு வருகிறது.மக்கள் தொகைக்கு இணையான தூய்மை காவலர்கள் நியமிக்கப்படாததும், குப்பைகள் தேங்க மற்றொரு காரணம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X