கோர்ட் செய்தி

தமிழ்நாடு

போட்டோகிராபர் மரணம் ரூ.21.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

Added : நவ 22, 2020
Share
Advertisement
சென்னை: விபத்தில் உயிரிழந்த போட்டோகிராபரின் பெற்றோருக்கு, 21.85 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் வி.பிரவீன் குமார், 24; போட்டோகிராபர். இவர், 2017 டிசம்பரில், காந்தி மண்டபம் சாலை, அண்ணா பல்கலை அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அதிவேகமாக வந்த கார், பிரவீன் பைக்

சென்னை: விபத்தில் உயிரிழந்த போட்டோகிராபரின் பெற்றோருக்கு, 21.85 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் வி.பிரவீன் குமார், 24; போட்டோகிராபர். இவர், 2017 டிசம்பரில், காந்தி மண்டபம் சாலை, அண்ணா பல்கலை அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அதிவேகமாக வந்த கார், பிரவீன் பைக் மீது மோதியது. படுகாயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், தன் மகனின் இறப்பிற்கு இழப்பீடு கோரி, பிரவீனின் பெற்றோர் சரஸ்வதி மற்றும் வெற்றி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு விசாரணை, நீதிபதி வி.சுதா முன் நடந்தது. விசாரணையில், மனுதாரர்களின் மகன் இறப்பிற்கு, காரை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கியதே காரணம் என்பது தெளிவாகிறது. எனவே, மனுதாரர்களுக்கு இழப்பீடாக, 24.28 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்படுகிறது.

இறந்தவரின் கனவக்குறைவுக்காக, 10 சதவீதம் இழப்பீட்டில் கழிக்கப்படுகிறது.இதன்படி, மனுதாரர்களுக்கு இழப்பீடாக, 21.85 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு 7.5 சதவீதம் வட்டியுடன், எச்.டி.எப்.சி., எர்கோ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X