சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிவைடரில் பைக் மோதி வாலிபர் பலி, ஒருவர் காயம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
அனுப்பர்பாளையம்:குன்னத்துார் அடுத்த சுண்டக்காபாளையத்தை சேர்ந்த மாதப்பன் மகன் செல்வராஜ், 22. குன்னத்துாரில் பேக்கரி நடத்திவந்தார்.நாமக்கல் பள்ளகவுண்டன்பட்டியை சேர்ந்த உதயசங்கர் மகன் கண்ணன், 33; டிரைவர். செல்வராஜூம், கண்ணனும் பெருமாநல்லுாரில் உள்ள தங்கள் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றுவிட்டு, கணக்கம்பாளையத்தில் உள்ள நண்பர்களை பார்க்க இருவரும் பைக்கில்

அனுப்பர்பாளையம்:குன்னத்துார் அடுத்த சுண்டக்காபாளையத்தை சேர்ந்த மாதப்பன் மகன் செல்வராஜ், 22. குன்னத்துாரில் பேக்கரி நடத்திவந்தார்.நாமக்கல் பள்ளகவுண்டன்பட்டியை சேர்ந்த உதயசங்கர் மகன் கண்ணன், 33; டிரைவர். செல்வராஜூம், கண்ணனும் பெருமாநல்லுாரில் உள்ள தங்கள் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றுவிட்டு, கணக்கம்பாளையத்தில் உள்ள நண்பர்களை பார்க்க இருவரும் பைக்கில் சென்றனர்.நண்பர்களை பார்த்துவிட்டு பைக்கில் திரும்பிக்கொண்டிருந்தபோது, பெருமாநல்லுார் ஊராட்சி அலுவலகம் அருகே, பைக் நிலைதடுமாறி, டிவைடரில் மோதியது. பலத்த காயமடைந்த செல்வராஜ், அதே இடத்தில், இறந்தார்.படுகாயமடைந்த கண்ணன், திருப்பூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.இதுகுறித்து பெருமாநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X