கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வீட்டு வசதி சங்கங்களில் அமையுது 'இ - சேவை' மையங்கள்

Added : நவ 22, 2020
Share
Advertisement
சென்னை; நலிந்த நிலையில் உள்ள கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில், 'இ - சேவை' மையங்கள் நடத்த, அரசின் அனுமதிக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.தமிழகத்தில், 860 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் உள்ளன. இதில், பெரும்பாலான சங்கங்கள் அலுவலக வாடகை, பணியாளர் ஊதியம் வழங்க முடியாத அளவுக்கு முடங்கி உள்ளன.மக்களுக்கு நியாயமான விலையில் மனை கிடைப்பது, வீட்டுக்கடன் கிடைக்க வேண்டும்

சென்னை; நலிந்த நிலையில் உள்ள கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில், 'இ - சேவை' மையங்கள் நடத்த, அரசின் அனுமதிக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில், 860 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் உள்ளன. இதில், பெரும்பாலான சங்கங்கள் அலுவலக வாடகை, பணியாளர் ஊதியம் வழங்க முடியாத அளவுக்கு முடங்கி உள்ளன.மக்களுக்கு நியாயமான விலையில் மனை கிடைப்பது, வீட்டுக்கடன் கிடைக்க வேண்டும் என்பது போன்ற நோக்கங்களை நிறைவேற்ற முடியாத நிலையில் இச்சங்கங்கள் உள்ளன. இச்சங்கங்களை மேம்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பயன்படுத்தாமல் உள்ள காலி நிலங்களை, ஏல முறையில் விற்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. அத்துடன் புதிய முயற்சியாக, 'இ - சேவை' மையங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, கூட்டுறவு வீட்டு வசதி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில், 4,000 கூட்டுறவு சங்கங்கள், 'இ - சேவை' மையங்களை நடத்தி வருகின்றன. இதுபோன்று, கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களிலும், 'இ - சேவை' மையங்களை நடத்தினால், ஓரளவுக்கு வருவாய் கிடைக்கும்.

தற்போதைய நிலையில், மொத்தமுள்ள, 860 சங்கங்களில், 40 சங்கங்கள், 'இ - சேவை' மையங்களை நடத்தி வருகின்றன. அனைத்து சங்கங்களுக்கும், இதை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. அரசு அனுமதி கிடைத்தவுடன், இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X