பொது செய்தி

தமிழ்நாடு

விருப்ப மனு கட்டணம்திரும்ப பெற அழைப்பு

Added : நவ 22, 2020
Share
Advertisement
சென்னை; உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனு கட்டணத்தை திரும்ப பெறும்படி, அ.தி.மு.க.,வினருக்கு, அக்கட்சி தலைமை அழைப்பு விடுத்துள்ளது. அ.தி.மு.க., தலைமை அறிக்கை: உள்ளாட்சி தேர்தல் நடக்க இருந்த நிலையில், அப்பதவிகளுக்கு கட்சி சார்பில், வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பு கேட்டவர்களிடம், 2019 நவம்பர், 15 முதல் டிச., வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி

சென்னை; உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனு கட்டணத்தை திரும்ப பெறும்படி, அ.தி.மு.க.,வினருக்கு, அக்கட்சி தலைமை அழைப்பு விடுத்துள்ளது. அ.தி.மு.க., தலைமை அறிக்கை: உள்ளாட்சி தேர்தல் நடக்க இருந்த நிலையில், அப்பதவிகளுக்கு கட்சி சார்பில், வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பு கேட்டவர்களிடம், 2019 நவம்பர், 15 முதல் டிச., வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல்கள் நடக்காததால், அப்பதவிகளுக்கு விருப்பமனு அளித்தோரின் விண்ணப்ப கட்டணத்தை, தலைமை அலுவலகத்தில் திரும்ப பெறலாம் என, 2019 நவம்பர், 21ல் அறிவிக்கப்பட்டது.அதன்படி, பலர் விருப்ப மனு கட்டணத்தை திரும்ப பெற்றனர். விருப்ப மனு கட்டணத்தை திரும்ப பெறாதவர்கள், இன்று முதல் டிச., 15 வரை, அசல் ரசீதுடன் தலைமை அலுவலகம் வந்து பெற்றுக் கொள்ளலாம். இந்த காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்படாது.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X