பொது செய்தி

தமிழ்நாடு

கன மழை பெய்ய வாய்ப்புபயிர் காப்பீடு செய்ய அறிவுரை

Added : நவ 22, 2020
Share
Advertisement
சென்னை; 'கன மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதால், இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் நிதி இழப்பில் இருந்து தப்புவதற்கு, விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும்' என, வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:இயற்கை இடர்பாடுகளால், பயிர்களில் ஏற்படும் மகசூல் இழப்பை ஈடு செய்ய, பயிர் காப்பீடு செய்வது மிகவும் அவசியம். தற்போது, சம்பா பருவ நெல்,

சென்னை; 'கன மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதால், இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் நிதி இழப்பில் இருந்து தப்புவதற்கு, விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும்' என, வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:இயற்கை இடர்பாடுகளால், பயிர்களில் ஏற்படும் மகசூல் இழப்பை ஈடு செய்ய, பயிர் காப்பீடு செய்வது மிகவும் அவசியம். தற்போது, சம்பா பருவ நெல், சிறுதானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட வேளாண் பயிர்கள்.மேலும், தோட்டக்கலை பயிர்களான வாழை, மரவள்ளி, வெங்காயம், உருளை, கேரட், கத்தரிக்காய், வெண்டை, தக்காளி, பூண்டு, இஞ்சி, கொத்துமல்லி, முட்டைகோஸ் போன்றவற்றுக்கான பயிர் காப்பீடு நடந்து வருகிறது.

வரும், 24 முதல், 26ம் தேதி வரை, மிக கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், வர்த்தக வங்கிகளுக்கு, விவசாயிகள் சென்று, உரிய காப்பீடு கட்டணத்தை செலுத்த வேண்டும். இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் நிதி இழப்பில் இருந்து, பாதுகாத்துக் கொள்ள வேண்டும். காப்பீடு செய்வதற்கு விண்ணப்ப படிவத்துடன், சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவை அவசியம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X