குடிநீர் குளறுபடியாலும் டெங்கு தாக்குதல்

Added : நவ 22, 2020
Share
Advertisement
திருப்பூர்:'குடிநீர் சப்ளை குளறு படியால், டிரம்களில் நீண்ட நாள் தண்ணீர் சேகரித்து பயன்படுத்த வேண்டியுள்ளது. இதில், கொசுப்புழுக்கள் உருவாவதும், டெங்கு காய்ச்சலுக்கு காரணமாகி விடுகிறது'' என்கின்றனர் பொதுமக்கள்.கடந்த வாரம், திருப்பூரில், தொடர் மழை பெய்ததால், டெங்கு பரவல் காணப்படுகிறது. அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில், சிலர்

திருப்பூர்:'குடிநீர் சப்ளை குளறு படியால், டிரம்களில் நீண்ட நாள் தண்ணீர் சேகரித்து பயன்படுத்த வேண்டியுள்ளது. இதில், கொசுப்புழுக்கள் உருவாவதும், டெங்கு காய்ச்சலுக்கு காரணமாகி விடுகிறது'' என்கின்றனர் பொதுமக்கள்.கடந்த வாரம், திருப்பூரில், தொடர் மழை பெய்ததால், டெங்கு பரவல் காணப்படுகிறது. அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில், சிலர் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். மருத்துவமனைகளில் டெங்கு நோயாளிகள் சிகிச்சை பெற, தனி வார்டு ஏற்படுத்தப்படவும் உள்ளது.டெங்கு அதிகரிக்க, மக்களிடையே விழிப்புணர்வு இல்லாததும், மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்காததும் காரணமாக உள்ளது. மழைக்காலங்களில் மட்டுமே தற்காலிக கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.நிரந்தரமாக மழைநீர் தேங்காமல், வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. நகரின் பெரும்பாலான பகுதிகளில், மழைநீர் கால்வாய்களை துார்வாரப்படாமல் உள்ளதால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.கொரோனா பரவல் ஒருபுறமிருக்க, டெங்கு பரவலும் ஏற்பட்டுள்ளதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.பொதுமக்கள் கூறுகையில், ''மாநகராட்சியின் பல பகுதிகளில், குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. தண்ணீர் பற்றாக்குறையை தவிர்க்க, பலரும் டிரம், பெரிய அளவிலான கொள்கலன் உள்ளிட்டவைகளில் தண்ணீர் பிடித்து வைத்து, நீண்ட நாட்கள் பயன்படுத்துகின்றனர். அங்கு, கொசுப்புழு உற்பத்தியாகி காய்ச்சல் ஏற்படுகிறது'' என்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X