பொது செய்தி

தமிழ்நாடு

உயிரின் உயிரே!

Added : நவ 22, 2020
Share
Advertisement
அவிநாசி:அவிநாசி அரசு மருத்துவமனையில், விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம், விபத்துகளில் சிக்குவோர், உடனடியாக சிகிச்சை பெற முடியும் என்பதால், உயிர்ப்பலிகள் தடுக்கப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.அவிநாசி அரசு மருத்துவமனை, தாலுகா மருத்துவமனையாக இருந்தும், 42 படுக்கை வசதி மட்டுமே உள்ளது. கோவை - சேலம் பை--பாஸ் ரோட்டை

அவிநாசி:அவிநாசி அரசு மருத்துவமனையில், விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம், விபத்துகளில் சிக்குவோர், உடனடியாக சிகிச்சை பெற முடியும் என்பதால், உயிர்ப்பலிகள் தடுக்கப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.அவிநாசி அரசு மருத்துவமனை, தாலுகா மருத்துவமனையாக இருந்தும், 42 படுக்கை வசதி மட்டுமே உள்ளது. கோவை - சேலம் பை--பாஸ் ரோட்டை ஒட்டி இருப்பதால், அடிக்கடி நடைபெறும் விபத்துகளில் சிக்குவோர் இம்மருத்துவமனைக்கு தான் அழைத்து வரப்படுகின்றனர்.கடந்த பிப்., மாதம், இந்த ரோட்டில் கேரள பஸ் மீது, கன்டெய்னர் லாரி மோதியதில் ஏற்பட்ட விபத்தில், 21 பேர் பலியாகினர். ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் இங்கு சிகிச்சை வழங்க முடியவில்லை.இங்கு உயிர் காக்கும் விபத்து சிகிச்சை மையம் ஏற்படுத்த, மருத்துவமனை நிர்வாகத்தினரின் பரிந்துரை அடிப்படையில், நீலகிரி எம்.பி., ராஜா, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார்.மாநில அரசு தரப்பில் இருந்தும், இதுகுறித்து பரிந்துரைக்கப்பட்டது. மத்திய குடும்ப நலத்துறை, இதைப் பரிசீலித்து, விபத்து மற்றும் தீவிர சிகிச்சை மையம் துவங்க, ஒப்புதலை வழங்கியுள்ளது.அவிநாசி மருத்துவமனையுடன் சேர்த்து, சென்னை பீச் ரோட்டில் உள்ள மருத்துவமனை, சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள மருத்துவமனைக்கும், மத்திய அரசு, இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது.மருத்துவ பணிகள் துறையினர் கூறுகையில், ''தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, ஐந்து கி.மீ., தொலைவிற்குள் உள்ள அரசு மருத்துவமனையில், விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு அமைக்க விதி உள்ளது என்ற அடிப்படையில் தான், அனுமதி கிடைத்துள்ளது. இதன் மூலம், இங்கு விரைவில் சிகிச்சை மையத்தை உருவாக்க வழி ஏற்பட்டுள்ளது'' என்றனர்.என்னென்ன தேவை...'இம்மருத்துவமனையில், ஆறு படுக்கை கொண்ட அவசரகால வார்டு, ஆறு படுக்கை கொண்ட 'ஐ.சி.யு.,' நவீன ஆய்வுக்கூடம், ரத்த சேமிப்பு அறை, 30 படுக்கை கொண்ட குழந்தைகள் வார்டு, வெளி நோயாளிகளுக்கானசிறப்பு அறை, மகப்பேறு மற்றும் குழந்தை நலன் சார்ந்த, 24 மணி நேர சேவை மையம், தண்ணீர் வசதியுடன் கூடிய நவீன அறுவை அரங்கு, நவீன சமையலறை, ஆண், பெண்களுக்கென தனி தனி வார்டு, குளிர்பதன வசதியுடன் கூடிய பிணவறை, கட்டமைப்புகள் ஏற்படுத்த வேண்டும்.''நகரின் மையப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையை, சற்று ஒதுக்குப்புறமான இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்'' என்ற மருத்துவமனை நிர்வாகத்தினரின் கோரிக்கையும், அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X