அரசியல் செய்தி

தமிழ்நாடு

தொடர் போராட்டம் பா.ம.க., தீர்மானம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
சென்னை; பா.ம.க., - வன்னியர் சங்க கூட்டு பொதுக்குழுக் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று நடந்தது. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்தார். அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்:தமிழக அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், வன்னியர்களுக்கு, 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு கோரி, டிச., 1 முதல், முதற் கட்ட தொடர் போராட்டம்; ஜன., மாதத்தில் இரண்டாம் கட்ட அறப்போராட்டம்

சென்னை; பா.ம.க., - வன்னியர் சங்க கூட்டு பொதுக்குழுக் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று நடந்தது. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்தார்.

அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்:தமிழக அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், வன்னியர்களுக்கு, 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு கோரி, டிச., 1 முதல், முதற் கட்ட தொடர் போராட்டம்; ஜன., மாதத்தில் இரண்டாம் கட்ட அறப்போராட்டம் நடத்தப்படும்.இப்போராட்டத்தை சிறப்பாக நடத்திட, மாநில மற்றும் மாவட்ட அளவில் போராட்ட குழுக்கள் அமைக்கப்படும். மாநில அளவிலான போராட்ட குழுவில் ஜி.கே.மணி, பு.தா.அருள்மொழி, தீரன், தன்ராஜ், ஏ.கே.மூர்த்தி, அருள், செல்லப்பா உட்பட, ஏழு பேர் நியமிக்கப்படுகின்றனர்.வன்னியர் தனி இட ஒதுக்கீடு போராட்டத்தின், கோரிக்கை விளக்க பதாகைகளை, அனைத்து கிராமங்களிலும், அனுமதி பெற்று அமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X