தமிழ்நாடு

முத்து முத்து சுடரே... கொடு வேண்டிடும் வரமே! அகல் விளக்கு விற்பனைக்கு குவிகிறது

Updated : நவ 23, 2020 | Added : நவ 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்பூர்:கார்த்திகை தீபத் திருநாளை கொண்டாடும் வகையில், நகரின் பல பகுதிகளில் அகல் விளக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.கார்த்திகை தீபத் திருநாள், வரும், 29ல் கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில், வீடு, கடை, அலுவலகம், கோவில்களில், அகல் விளக்கில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்துவர்.திருப்பூரில், அவிநாசி ரோடு, பி.என்.ரோடு, தாராபுரம் ரோடு உள்ளிட்ட பிரதான ரோட்டோரங்களில் அகல் விளக்குகள்
முத்து முத்து சுடரே... கொடு வேண்டிடும் வரமே! அகல் விளக்கு விற்பனைக்கு குவிகிறது

திருப்பூர்:கார்த்திகை தீபத் திருநாளை கொண்டாடும் வகையில், நகரின் பல பகுதிகளில் அகல் விளக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.கார்த்திகை தீபத் திருநாள், வரும், 29ல் கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில், வீடு, கடை, அலுவலகம், கோவில்களில், அகல் விளக்கில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்துவர்.
திருப்பூரில், அவிநாசி ரோடு, பி.என்.ரோடு, தாராபுரம் ரோடு உள்ளிட்ட பிரதான ரோட்டோரங்களில் அகல் விளக்குகள் விற்பனையில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர்.'சுட்டி' விளக்கு முதல், ஐந்து முக விளக்கு, கடவுளர்களுடன் கூடிய விளக்கு, அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சரவிளக்கு என, பல வடிவங்களில் விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.சிறிய விளக்குகள் முதல் பெரிய அளவிலான விளக்குகள், ஒரு ரூபாய் முதல், 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. அதனை, ஏராளமான பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.
வியாபாரிகள் கூறுகையில், 'சீசனுக்கு ஏற்றாற்போல், சுவாமி சிலைகள், மண் பொம்மைகள் மற் றும் கார்த்திகை தீப விளக்குகள் விற்கப்படுகிறது. நடப்பாண்டு, பருவ மழைக்கு முன்னரே, அகல்விளக்கு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். ஈரோடு, கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் விளக்குகள் தருவிக்கப்படுகின்றன.கொரோனா காரணமாக கோவில் விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், மண் விளக்குகள் விற்பனை மந்தமாகவே உள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-நவ-202009:40:44 IST Report Abuse
ருத்ரா பட்டாசு தொழில் செய்பவராகட்டும் அகல் விளக்கு செய்பவராகட்டும் உழவு தொழில் செய்பவராகட்டும் இவர்கள் வாழ்வு சிறக்கவே நமது பாரம்பரிய பண்டிகைகள் இறைவனால் அளிக்கப்பட்டது. God is great.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X