பொது செய்தி

தமிழ்நாடு

'ஒரு விரல்' புரட்சிக்கு இளம் வாக்காளர் ரெடி

Added : நவ 22, 2020
Share
Advertisement
திருப்பூர்:சட்டசபை தேர்தலையொட்டி, திருப்பூர் மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதியில், 23 லட்சத்து, 3 ஆயிரத்து, 842 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.புதிய வாக்காளர்களை சேர்க்கும் விதத்திலும், வாக்காளர் அடையாள அட்டைகளில் திருத்தம் செய்து கொள்ள ஏதுவாகவும் கடந்த இரு தினங்களாக, 1,043 ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு

திருப்பூர்:சட்டசபை தேர்தலையொட்டி, திருப்பூர் மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதியில், 23 லட்சத்து, 3 ஆயிரத்து, 842 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.புதிய வாக்காளர்களை சேர்க்கும் விதத்திலும், வாக்காளர் அடையாள அட்டைகளில் திருத்தம் செய்து கொள்ள ஏதுவாகவும் கடந்த இரு தினங்களாக, 1,043 ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள், 2021ல் ஜன., 1ல், 18 வயது நிறைவு பெற்றவர்கள், படிவம்6-ஐ பூர்த்தி செய்தும், பெயர் நீக்கம் தொடர்பாக படிவம் 7-ஐ பூர்த்தி செய்தும், பதிவுகளில் திருத்தம் தொடர்பாக படிவம் 8-ஐ பூர்த்தி செய்தும், புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 8 ஏ-ஐ பூர்த்தி செய்தும், அதற்கான ஆவண ஆதார நகலை இணைத்தும் பொதுமக்கள் வழங்கினர்.வாக்காளராக சேர, 18 வயது நிரம்பிய இளம் வாக் காளர்கள் அதிக ஆர்வம் காட்டினர். 'நாங்கள் தான், எந்த வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதை தீர்மானிப்பவர்களாக இருப்போம்' என்று இளம் வாக்காளர்கள் கூறினர்.கலெக்டர் விஜய கார்த்திகேயன், திருப்பூர் தெற்கு மற்றும் பல்லடம் தொகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் நடந்த சிறப்பு முகாமை ஆய்வு செய்தார்.அப்போது, வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் மற்றும் திருத்தம் செய்ய பெறப்படும் படிவங்களுடன் உரிய ஆவணங்களை இணைத்து பெற வேண்டும்; பெறப்படும் படிவங்களின் பேரில் விசாரணை மேற்கொண்டு உரிய காலத்துக்குள் முடிவு செய்ய வேண்டும் என அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X