மியாவாக்கி காடு வளர்ப்பு வேளாண் மாணவர்களுக்கு பயிற்சி | Dinamalar

மியாவாக்கி காடு வளர்ப்பு வேளாண் மாணவர்களுக்கு பயிற்சி

Added : நவ 22, 2020
காரைக்கால் : வேளாண் கல்லுாரி இளங்கலை பட்டப்படிப்பு இறுதியாண்டு மாணவர்களுக்கு ஜப்பானிய மியாவாக்கி காடு வளர்ப்பு முறைகள் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது.கல்லுாரியின் இறுதியாண்டு மாணவர்கள், பேராசிரியர் ஆனந்த்குமார் தலைமையில் கள பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில் வடமட்டம் கிராமத்தில் ஜப்பானிய மியாவாக்கி காடு வளர்ப்பு முறை குறித்து மாணவர்களுக்கு

காரைக்கால் : வேளாண் கல்லுாரி இளங்கலை பட்டப்படிப்பு இறுதியாண்டு மாணவர்களுக்கு ஜப்பானிய மியாவாக்கி காடு வளர்ப்பு முறைகள் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது.



கல்லுாரியின் இறுதியாண்டு மாணவர்கள், பேராசிரியர் ஆனந்த்குமார் தலைமையில் கள பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில் வடமட்டம் கிராமத்தில் ஜப்பானிய மியாவாக்கி காடு வளர்ப்பு முறை குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.இதில் காரைக்காலை சேர்ந்த மணிகண்டன் கோபிநாத் என்பவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். விவசாயத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், வடமட்டம் கிராமத்தில் சுமார் 3.5 ஏக்கர் நிலப்பரப்பில் ஒருங்கிணைந்த பண்ணையில் அழகிய குளம், குடில் மற்றும் ஜப்பானிய முறையில் அடர் குறுங்காடு உள்ளடங்கிய பசுமை பண்ணை உருவாக்கி உள்ளார்.

இப்பண்ணையின் ஒரு சிறப்பு அம்சமாக ஜப்பானிய நாட்டை சேர்ந்த தாவரவியலாளர் அகிரா மியாவாக்கி அவர்கள் பரிந்துரைத்த அடர் குறுங்காடு ஒன்று 1300 சதுர அடி பரப்பளவில் 120 வகையான உள்நாட்டு கட்டுமான மரங்கள், குறுஞ்செடிகள் மற்றும் புதர்செடிகளை குறுகிய இடைவெளியில் நெருக்கமாக உருவாக்கப்பட்டு வருகிறது.மேலும் மியாவாக்கி காடுகளை வளர்க்கும் மற்றும் பராமரிக்கும் முறைகளைப் பற்றியும் மாணவர்களுக்கு விரிவாக விளக்கினார். இப்பயிற்சியில் கல்லுாரி மாணவி ஜனனி, இந்துஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X