பொது செய்தி

தமிழ்நாடு

'டீ, காபி, இட்லி, வடை...'; கூவி அழைத்து நாளாச்சு: 2 நிமிடம் மட்டுமே நிற்கும் சிறப்பு ரயில்கள்

Added : நவ 22, 2020
Share
Advertisement
திருப்பூர்:இரு மாதங்களாக, முற்றிலும் முன்பதிவு பெட்டிகளை மட்டுமே கொண்ட சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.திருப்பூரை, பகலில் ஆறு ரயில்களும், இரவில், 11 ரயில்களும் கடக்கின்றன. சூப்பர்பாஸ்ட், எக்ஸ்பிரஸ் என்பதால் அனைத்தும் இரண்டு நிமிடம் மட்டுமே நிற்கிறது.ஊரடங்குக்கு முன்பு, வழக்கமாக, 45 ரயில்கள் திருப்பூரை கடக்கும்போது ரயில்வே கேன்டீனில் தயாராகும் உணவு

திருப்பூர்:இரு மாதங்களாக, முற்றிலும் முன்பதிவு பெட்டிகளை மட்டுமே கொண்ட சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.திருப்பூரை, பகலில் ஆறு ரயில்களும், இரவில், 11 ரயில்களும் கடக்கின்றன. சூப்பர்பாஸ்ட், எக்ஸ்பிரஸ் என்பதால் அனைத்தும் இரண்டு நிமிடம் மட்டுமே நிற்கிறது.ஊரடங்குக்கு முன்பு, வழக்கமாக, 45 ரயில்கள் திருப்பூரை கடக்கும்போது ரயில்வே கேன்டீனில் தயாராகும் உணவு பதார்த்தங்கள், ஊழியர்கள் மூலம் இரு பிளாட்பார்மில் விற்கப்படும். இதற்கென, 15 பேர் இரண்டு 'ஷிப்ட்'டுகளாக பணிபுரிவர். ஸ்டேஷனில் தின்பண்டம் விற்க ஆறு கடைகள் செயல்பட்டன.ஊரடங்கால் ரயில் இயக்கம் நிறுத்தப்பட்ட போது, கடைகள் இழுத்து மூடப்பட்டன. ஊழியர்கள் மாற்று பணிக்கு சென்றனர். சிறப்பு ரயில் இயக்கம் துவங்கிய போதும், முன்பதிவு இல்லாத பயணிகளுக்கு அனுமதி இல்லாததால், ரயில் வரும் நேரத்துக்கு மட்டுமே பயணிகள் வருகின்றனர்.அவர்களுக்கு தேவையான உணவு, ரயிலில் வழங்கப்படுவதால், பிளாட்பார்ம் கடைகளை அவர்கள் தேடுவதில்லை. அதற்கான அவசியமில்லாமல் போனதால், கேன்டீன், கேட்டரிங் ஊழியர் இதுவரை விற்பனையை துவக்கவும் இல்லை.சிறப்பு ரயில் பிளாட்பார்ம் வந்தாலும், 'டீ, காபி, இட்லி, வடை, பொங்கல்....' என்ற சத்தமே இல்லாமல் ஸ்டேஷன் வெறிச்சோடி காணப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X