பொது செய்தி

தமிழ்நாடு

கலாசார கலை நிகழ்ச்சிகளில் 200 பேர் பங்கேற்க அனுமதி

Added : நவ 22, 2020
Share
Advertisement
சென்னை: கலாசார கலை நிகழ்ச்சிகளில், 200 பேர் வரை பங்கேற்கும் வகையில், ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், இம்மாதம், 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், டிசம்பரில் இசை விழாக்கள் நடக்கவுள்ளன. எனவே, கலாசார கலை நிகழ்ச்சிகளுக்கு கூடுதல் தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என, பாரதிய வித்யாபவன்
 கலாசார கலை நிகழ்ச்சிகளில்  200 பேர் பங்கேற்க அனுமதி

சென்னை: கலாசார கலை நிகழ்ச்சிகளில், 200 பேர் வரை பங்கேற்கும் வகையில், ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், இம்மாதம், 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், டிசம்பரில் இசை விழாக்கள் நடக்கவுள்ளன. எனவே, கலாசார கலை நிகழ்ச்சிகளுக்கு கூடுதல் தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என, பாரதிய வித்யாபவன் உள்ளிட்ட அமைப்புகள், அரசிடம் கோரிக்கை வைத்தன.அதை அரசு பரிசீலித்து, வரும், 25ம் தேதி முதல், கலாச்சார கலை நிகழ்ச்சிகள் நடத்த, கூடுதல் தளர்வுகளை அறிவித்துள்ளது.

அதன்படி, நிகழ்ச்சி நடக்கும் அரங்கில், 50 சதவீதம் வரை, அதாவது, 200 பேர் வரை பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்போர் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.அதேநேரம், அரசியல், பொழுதுபோக்கு, மத ரீதியான கூட்டங்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள தடை தொடரும் என, அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை, அரசின் தலைமை செயலர் சண்முகம் பிறப்பித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X