பொது செய்தி

தமிழ்நாடு

ஜி.பி.ஆர்.எஸ்., கருவிக்கு லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு

Added : நவ 22, 2020
Share
Advertisement
சென்னை:போக்குவரத்து வாகனங்களில், ஜி.பி.ஆர்.எஸ்., கருவிகள் பொருத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதற்கு, லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் உள்ள போக்குவரத்து வாகனங்களுக்கு, புவியிடம் காட்டியான ஜி.பி.ஆர்.எஸ்., கருவிகளை, எட்டு நிறுவனங்களிடம் மட்டும் வாங்கிப் பொருத்துவது கட்டாயம் என, தமிழக போக்குவரத்து துறை தெரிவித்தது.இதற்கு, லாரி உரிமையாளர்கள்

சென்னை:போக்குவரத்து வாகனங்களில், ஜி.பி.ஆர்.எஸ்., கருவிகள் பொருத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதற்கு, லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள போக்குவரத்து வாகனங்களுக்கு, புவியிடம் காட்டியான ஜி.பி.ஆர்.எஸ்., கருவிகளை, எட்டு நிறுவனங்களிடம் மட்டும் வாங்கிப் பொருத்துவது கட்டாயம் என, தமிழக போக்குவரத்து துறை தெரிவித்தது.இதற்கு, லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன் செயலர் தன்ராஜ் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள போக்குவரத்து வாகனங்களுக்கு, 'ரிப்லெக்டிவ் ஸ்டிக்கர்'கள், வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள், ஜி.பி.ஆர்.எஸ்., கருவிகளை, குறிப்பிட்ட நிறுவனங்களிடம் மட்டுமே வாங்க வேண்டும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.இதில், ரிப்லெக்டிவ் ஸ்டிக்கர் மற்றும் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள் பொருத்துவது குறித்த வழக்கு, இன்னும் நிலுவையில் உள்ளது.தற்போது, ஜி.பி.ஆர்.எஸ்., கருவி பொருத்துவதிலும், இரண்டு விதமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது, முதல் அறிவிப்பில், அனைத்து போக்குவரத்து வாகனங்களுக்கும் கட்டாயம் என்றும், இரண்டாவது அறிவிப்பில், தேசிய அனுமதி பெற்ற வாகனங்களுக்கு கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவலுக்குப் பின், லாரிகள் மற்றும் வாடகை வாகனங்களை இயக்க முடியாத அளவுக்கு, கடன் சுமை அதிகரித்துள்ளது.பக்கத்து மாநிலங்களில் எல்லாம், வாகன உரிமையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் நெருக்கடிகள் தொடர்கின்றன. தற்போது, இவற்றில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X