சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

ஒளிமயமான எதிர்காலம்!

Updated : நவ 23, 2020 | Added : நவ 22, 2020
Share
Advertisement
'மிகப் பெரிய பதவிக்கு அஸ்திவாரம் போடுகிறார்' என, பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் பற்றி, பொடி வைத்து பேசுகின்றனர், பா.ஜ., முக்கிய பிரமுகர்கள்.கங்கனாவுக்கும், சர்ச்சைகளுக்கும் அப்படி ஒரு பொருத்தம். அவர் வாய் திறந்தாலே, சர்ச்சை பற்றிக் கொள்ளும். சமீபத்தில், மஹாராஷ்டிராவை ஆளும், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, காங்., தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை கடுமையாக
அக்கம் பக்கம்

'மிகப் பெரிய பதவிக்கு அஸ்திவாரம் போடுகிறார்' என, பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் பற்றி, பொடி வைத்து பேசுகின்றனர், பா.ஜ., முக்கிய பிரமுகர்கள்.
கங்கனாவுக்கும், சர்ச்சைகளுக்கும் அப்படி ஒரு பொருத்தம். அவர் வாய் திறந்தாலே, சர்ச்சை பற்றிக் கொள்ளும். சமீபத்தில், மஹாராஷ்டிராவை ஆளும், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, காங்., தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். மும்பையை, ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசினார். இதனால், சிவசேனா கட்சியினர் கடும் டென்ஷனாகி, 'இனி, மும்பைக்குள் கால் வைக்க முடியாது' என, கங்கனாவை மிரட்டினர்.

இதற்கு பதிலடியாக, கங்கனாவுக்கு, மத்திய பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு அளித்தது, மத்திய அரசு. அப்போதே, பா.ஜ.,வின் செல்லப் பிள்ளையாக மாறி விட்டார் கங்கனா. தற்போது, அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தை கதைக்களமாக வைத்து, திரைப்படம் ஒன்றை இயக்கி, அதில் நடிக்கப் போவதாகவும் அறிவித்து, பா.ஜ.,வினரை குஷிப்படுத்தியுள்ளார்.

இதைக் கேள்விப்பட்ட, பா.ஜ., மூத்த தலைவர்கள் சிலர், 'கங்கனாவுக்கு, இன்னும் ஒரு சில ஆண்டுகள் தான், சினிமாவில் மார்க்கெட் இருக்கும். அதற்கு பின், அரசியலில் குதிப்பார். அதற்கான வேலைகளை இப்போதே துவங்கியுள்ளார்' என்கின்றனர். கங்கனாவுக்கு வேண்டியவர்களோ, 'நடிகையர், அரசியலுக்கு வருவதில் என்ன தப்பு... கங்கனாவுக்கு, ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது' என, பெருமையடிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X