பொது செய்தி

தமிழ்நாடு

ஆவின் இனிப்புகள் 6 கோடிக்கு விற்பனை

Added : நவ 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: 'ஆவின்' நிறுவனம், தீபாவளி பண்டிகைக்கு, 6 கோடி ரூபாய்க்கு சிறப்பு இனிப்பு வகைகளை விற்பனை செய்து, 83.50 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. ஆவின் நிறுவனம், தீபாவளி பண்டிகையையொட்டி, ஸ்டப்டு டிரை ஜாமுன், நட்டி மில்க் கேக், ஸ்டப்டு மோதி பாக், காஜு பிஸ்தா ரோல், பிளேவர்டு மில்க் பர்பி, நெய் முறுக்கு ஆகியவற்றை புதிதாக அறிமுகப்படுத்தி, விற்பனை செய்தது.சென்னையில், 50 தற்காலிக

சென்னை: 'ஆவின்' நிறுவனம், தீபாவளி பண்டிகைக்கு, 6 கோடி ரூபாய்க்கு சிறப்பு இனிப்பு வகைகளை விற்பனை செய்து, 83.50 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது.

ஆவின் நிறுவனம், தீபாவளி பண்டிகையையொட்டி, ஸ்டப்டு டிரை ஜாமுன், நட்டி மில்க் கேக், ஸ்டப்டு மோதி பாக், காஜு பிஸ்தா ரோல், பிளேவர்டு மில்க் பர்பி, நெய் முறுக்கு ஆகியவற்றை புதிதாக அறிமுகப்படுத்தி, விற்பனை செய்தது.சென்னையில், 50 தற்காலிக சிறப்பு இனிப்பு விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டு, இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்பட்டன.இந்த ஆண்டு, 114 டன் இனிப்புகள், 6 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளன. இதன் வழியே, 83.50 லட்சம் ரூபாய் நிகர லாபம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டை விட, 1.15 கோடி ரூபாய்க்கு விற்பனை அதிகரித்துள்ளது.இது தவிர ஒன்றியங்களில், இந்த ஆண்டு, 186 டன் ஆவின் இனிப்புகள், 9 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளன.தீபாவளிக்காக அறிமுகம் செய்யப்பட்ட, ஐந்து வகையான இனிப்புகளில், காஜு பிஸ்தா ரோல், ஸ்டப்டு மோதி பாக் ஆகியவை, மக்களிடம் அதிகம் வரவேற்பு பெற்றன. எனவே, அவற்றை தொடர்ந்து உற்பத்தி செய்து விற்பனை செய்ய உள்ளதாக, ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
24-நவ-202006:18:40 IST Report Abuse
Bhaskaran ஆவின் பால்கோவாவும் மைசூர் பா வும் உண்மையில் மிக நன்றாக இருக்கும் .உறவினர் வீட்டுக்கு செல்பவர்கள் இந்த தரமான கலப்படமில்லாத inippu kalai வாங்கிச்செல்லலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X