சென்னை: 'ஆவின்' நிறுவனம், தீபாவளி பண்டிகைக்கு, 6 கோடி ரூபாய்க்கு சிறப்பு இனிப்பு வகைகளை விற்பனை செய்து, 83.50 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது.
ஆவின் நிறுவனம், தீபாவளி பண்டிகையையொட்டி, ஸ்டப்டு டிரை ஜாமுன், நட்டி மில்க் கேக், ஸ்டப்டு மோதி பாக், காஜு பிஸ்தா ரோல், பிளேவர்டு மில்க் பர்பி, நெய் முறுக்கு ஆகியவற்றை புதிதாக அறிமுகப்படுத்தி, விற்பனை செய்தது.சென்னையில், 50 தற்காலிக சிறப்பு இனிப்பு விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டு, இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்பட்டன.இந்த ஆண்டு, 114 டன் இனிப்புகள், 6 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளன. இதன் வழியே, 83.50 லட்சம் ரூபாய் நிகர லாபம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டை விட, 1.15 கோடி ரூபாய்க்கு விற்பனை அதிகரித்துள்ளது.இது தவிர ஒன்றியங்களில், இந்த ஆண்டு, 186 டன் ஆவின் இனிப்புகள், 9 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளன.தீபாவளிக்காக அறிமுகம் செய்யப்பட்ட, ஐந்து வகையான இனிப்புகளில், காஜு பிஸ்தா ரோல், ஸ்டப்டு மோதி பாக் ஆகியவை, மக்களிடம் அதிகம் வரவேற்பு பெற்றன. எனவே, அவற்றை தொடர்ந்து உற்பத்தி செய்து விற்பனை செய்ய உள்ளதாக, ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE