வாடகைக்கு எடுத்துச் சென்ற 8 கார்களுடன் தலைமறைவு: மூவருக்கு போலீஸ் வலை

Added : நவ 22, 2020
Share
Advertisement
புதுச்சேரி : வாடகைக்கு என எடுத்துச் சென்ற 8 கார்களுடன் தலைமறைவான மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி மூலக்குளம், ஜே.ஜே. நகர், 6வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ், 26; இவர் பிஒய்-05-எப்-6414 பதிவெண் கொண்ட தனது மாருதி சுசூகி பெலினோ காரை, வாடகைக்கு கொடுத்து வந்தார். கடந்த செப்டம்பர் மாதம், கோரிமேட்டைச் சேர்ந்த ஜீவா (எ) ஜீவரத்தினம், விக்னேஷிடம் அறிமுகமாகினார்.அப்போது,

புதுச்சேரி : வாடகைக்கு என எடுத்துச் சென்ற 8 கார்களுடன் தலைமறைவான மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி மூலக்குளம், ஜே.ஜே. நகர், 6வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ், 26; இவர் பிஒய்-05-எப்-6414 பதிவெண் கொண்ட தனது மாருதி சுசூகி பெலினோ காரை, வாடகைக்கு கொடுத்து வந்தார். கடந்த செப்டம்பர் மாதம், கோரிமேட்டைச் சேர்ந்த ஜீவா (எ) ஜீவரத்தினம், விக்னேஷிடம் அறிமுகமாகினார்.

அப்போது, மூலக்குளம் பகுதியில் ஜோதி கார் வாடகை நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதற்கு கார் வாடகைக்கு வேண்டும் என ஜீவரத்தினம் கேட்டுள்ளார். அதற்கு, விக்னேஷ் தனது பெலினோ காரை தினசரி ரூ. 1000 வாடகைக்கு பேசி, முன்பணம் ரூ. 10 ஆயிரம் பெற்றுக் கொண்டு காரை கொடுத்துள்ளார். ஜீவரத்தினத்துடன், பண்ருட்டியைச் சேர்ந்த சிவமணி, பாலமுருகன் உடனிருந்தனர்.

இதேபோல் மேலும் பல கார்கள் வாடகைக்கு தேவைப்படுவதாக ஜீவரத்தினம் கூறினார். அதனை நம்பி, விக்னேஷ் தனக்கு தெரிந்த நண்பர்களிடம் பேசி, அவர்களின் கார்களையும், நாள் வாடகைக்கு ஜீவரத்தினத்திடம் கொடுத்துள்ளார்.அதன்படி, கோரிமேடு அரவிந்தனின் இரண்டு ஷிப்ட் டிசையர் கார், சந்தோஷ் என்பவரிடம் மகேந்திரா எக்ஸ்.யு.வி., கார், கோட்டக்குப்பம் விஜய் என்பவரிடம் 2 ஹூண்டாய் எத்தியாஸ் கார், ஒரு போலோ என 3 கார்களும், கடைசியாக மூலக்குளம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரிடம் இருந்து ஷிப்ட் டிசையர் காரை வாங்கி சென்றுள்ளனர்.

காரை வாங்கிய சில நாட்களில், அதற்கான வாடகையை கொடுக்காமல் ஜீவரத்தினம் ஏமாற்றி வந்துள்ளார். அவரது அலுவலகம் என தெரிவித்த இடத்திலும், கார்கள் இல்லை. அதிர்ச்சி அடைந்த கார் உரிமையாளர்கள், விக்னேசை தொடர்பு கொண்டு காரை பெற்றுத் தர வலியுறுத்தினர்.

விக்னேஷ் கார் வாடகைக்கு விடுவதற்காக வாங்கி சென்று, கார்களுடன் மாயமான ஜீவரத்தினம், பண்ருட்டி சிவமணி, பாலமுருகன் ஆகியோர் மீது போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து மூவரையும் தேடி வருகின்றனர்.

ஜீவரத்தினம், ரெயின்போ நகர் மற்றும் லாஸ்பேட்டை கார் வாடகை அலுவலகம் திறந்து, பலரது சொந்த பயன்பாட்டு கார்களை, வாடகைக்கு வாங்கி திருப்பி தராமல் ஏமாற்றியுள்ளதாக பெரியக்கடை மற்றும் லாஸ்பேட்டை போலீசில் புகார் உள்ளது.இதுதொடர்பாக போலீசார், ஜீவரத்தினத்தை அழைத்து விசாரித்தனர். அப்போது, கார்களை திருப்பி கொடுப்பதாக கூறிவிட்டு சென்ற ஜீவரத்தினம் தற்போது தலைமறைவாகியுள்ளார். பெரியக்கடை, லாஸ்பேட்டையில் அளித்த புகார் தொடர்பாகவும் போலீசார் தற்போது விசாரிக்க துவங்கியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X