பொது செய்தி

தமிழ்நாடு

விதிமுறைகள் வகுக்கும் பணி தாமதம் வேளாண் சட்டம் அமலாவதில் சிக்கல்

Added : நவ 22, 2020
Share
Advertisement
சென்னை: விதிமுறைகள் வகுக்கும் பணி தாமதமாவதால், மத்திய அரசு கொண்டு வந்துள்ள, மூன்று புதிய வேளாண் சட்டங்களை, தமிழகத்தில் அமல்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.வேளாண் விளைபொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தொடர்பான, மூன்று புதிய சட்டங்களை, செப்டம்பரில் மத்திய அரசு நிறைவேற்றியது. வேலைவாய்ப்புவிலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த சட்டம் வாயிலாக, கரும்பு, கோகோ

சென்னை: விதிமுறைகள் வகுக்கும் பணி தாமதமாவதால், மத்திய அரசு கொண்டு வந்துள்ள, மூன்று புதிய வேளாண் சட்டங்களை, தமிழகத்தில் அமல்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.

வேளாண் விளைபொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தொடர்பான, மூன்று புதிய சட்டங்களை, செப்டம்பரில் மத்திய அரசு நிறைவேற்றியது. வேலைவாய்ப்புவிலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த சட்டம் வாயிலாக, கரும்பு, கோகோ மற்றும் கோழிப் பண்ணைகளில் ஒப்பந்த பண்ணை முறை நெறிப்படுத்தப்படும். எளிதில் அழுகும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும். உணவு பதப்படுத்தும் தொழில் முன்னேற்றத்தால், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.விவசாய விளைபொருட்கள் வணிகம் வர்த்தகம் தொடர்பான சட்டத்தால், விரும்பும் இடத்தில் தங்கள் விளைபொருட்களை விவசாயிகள் விற்பனை செய்யலாம். கமிஷன் ஏஜன்டுகள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். சாகுபடி செய்யும் இடத்திலேயே கொள்முதல் செய்ய, இந்த சட்டம் வழிவகை செய்யும். அத்தியாவசிய பொருட்கள் அவசர திருத்த சட்டத்தால், குளிர்பதன கிடங்கு வசதிகள் அதிகரிக்கும். பயன் அடைவர்கார்ப்பரேட் நிறுவனங்கள் அத்தியாவசிய பொருட்களை பதுக்குவதற்கு வாய்ப்பில்லாத சூழல் ஏற்படும்.

இச்சட்டத்தால், விவசாயிகள் மட்டுமின்றி நுகர்வோரும் பயன் அடைவர்.மத்திய அரசு கொண்டு வந்த, இந்த மூன்று சட்டங்களை, வேளாண் துறையின் கீழ் இயங்கும், வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை வாயிலாக செயல்படுத்த, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இந்த சட்டங்களை, தமிழகத்தில் அமல்படுத்தும் வகையில், விதிமுறைகள் வகுக்கும் பணி, செப்டம்பரில் துவங்கியது. இரண்டு மாதங்களுக்கு மேலாகியும், பணி இன்னும் முழுமை பெறாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.இதனால், தமிழகத்தில், 2021 முதல், இந்த சட்டங்களை அமல்படுத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X