பொது செய்தி

தமிழ்நாடு

போலீசாரின் தடையில்லா சான்று பல மாதமாக காத்திருக்கும் அவலம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
சென்னை: தொலைந்து போன பள்ளி, கல்லுாரி சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களின், 'டூப்ளிகேட்' பெற, போலீசாரின் தடையில்லா சான்று பெறுவது பெரும் சவாலாக உள்ளதாக புகார் கூறப்படுகிறது. 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பித்தாலும், தடையில்லா சான்று பெற, மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். சவாலாக உள்ளதுஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், வாகன பதிவு

சென்னை: தொலைந்து போன பள்ளி, கல்லுாரி சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களின், 'டூப்ளிகேட்' பெற, போலீசாரின் தடையில்லா சான்று பெறுவது பெரும் சவாலாக உள்ளதாக புகார் கூறப்படுகிறது.

'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பித்தாலும், தடையில்லா சான்று பெற, மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். சவாலாக உள்ளதுஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், வாகன பதிவு சான்று எனப்படும், ஆர்.சி., புத்தகம் மற்றும் பள்ளி, கல்லுாரி சான்றிதழ்கள் தொலைந்தால், அதற்கு மாற்றான சான்றிதழ்களை பெற, காவல் நிலையங்களில் புகார் அளிக்க வேண்டும்.

இப்புகார்களை ஏற்பதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. எனினும், புகார் அளித்த பின், தமிழக குற்ற ஆவண காப்பகத்தின் ஒப்புதல் பெற்று, தடையில்லா சான்று வழங்குவர். அவற்றை உரிய துறை அலுவலகங்களில் சமர்ப்பித்து, டூப்ளிகேட் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு காலதாமதம் ஏற்பட்டு வந்தது.அதனால், தமிழக போலீசார், ஆன்லைன் வாயிலாக புகார் அளித்த, 15 நாட்களுக்குள், தடையில்லா சான்று வழங்கும் முறையை, 2017ல் அறிமுகம் செய்தனர். கேள்விக்குறிஇந்த முறையில், கடந்த சில மாதங்களாக தடையில்லா சான்று உரிய நேரத்தில் கிடைப்பது இல்லை. போலீசாரின் இணையதளத்தில் புகார் அளிப்பதே சவாலாக உள்ளது. புகார் ஏற்பு ரசீதும் கிடைப்பது இல்லை. தடையில்லா சான்றிதழ்கள் பெற, பல மாதங்கள் காத்துக் கிடக்க வேண்டிய அவலம் நீடிக்கிறது.

இது குறித்து, பாதிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது: என் மகனின் பள்ளி மாற்றுச் சான்றிதழ் தொலைந்து விட்டது. அது பற்றி, அக்., 1ல், அரசு நடத்தும், இ - சேவை மையம் வாயிலாக புகார் அளித்தேன்; இதுவரை எந்த பதிலும் வரவில்லை. போலீஸ் இணையதளத்திலும் தடையில்லா சான்றை பதிவிறக்கம் செய்ய முயடிவில்லை. 15 நாட்களுக்குள் கிடைக்க வேண்டிய சான்று, மூன்று மாதமாகியும் கிடைக்கவில்லை. இதனால், மகனின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. அவனுக்கான டூப்ளிகேட் சான்றிதழ் பெற முடியாமல் தவிக்கிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X