சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

ஒரு படமேஎடுக்கலாம்!

Updated : நவ 23, 2020 | Added : நவ 23, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
ஈ.எஸ்.சந்திரசேகரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பாவின், 200 கோடி ரூபாய் ஊழல் குறித்த, 'ஆடு புலி ஆட்டம்' பற்றி, ஒரு படமே எடுக்கலாம். அவரின் மேல் புகார்கள் குவிந்திருப்பது, பாரம்பரியமிக்க அண்ணா பல்கலை மீது சேற்றை வீசியுள்ளது.தற்காலிக உதவி பேராசிரியர்களை நியமிக்க, ஒவ்வொருவரிடமும், 13 முதல், 15 லட்சம் ரூபாய் வரை, மொத்தம், 80
 இது உங்கள் இடம்

ஈ.எஸ்.சந்திரசேகரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பாவின், 200 கோடி ரூபாய் ஊழல் குறித்த, 'ஆடு புலி ஆட்டம்' பற்றி, ஒரு படமே எடுக்கலாம்.

அவரின் மேல் புகார்கள் குவிந்திருப்பது, பாரம்பரியமிக்க அண்ணா பல்கலை மீது சேற்றை வீசியுள்ளது.தற்காலிக உதவி பேராசிரியர்களை நியமிக்க, ஒவ்வொருவரிடமும், 13 முதல், 15 லட்சம் ரூபாய் வரை, மொத்தம், 80 கோடி ரூபாய் வசூலித்துள்ளனராம்.தேர்வு துறை நிர்வாக பணியில், அலுவலக உதவியாளர் நியமனம் செய்வதில், போலி சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளதாம். சுரப்பா, தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, தன் மகளுக்கு பணி நியமனம் வழங்கிஉள்ளாராம்.
உறுப்பு கல்லுாரிகளுக்கு, இயந்திரங்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாம்.இவை தவிர நிதி, செமஸ்டர் தேர்வு, மறுமதிப்பீடு ஆகியவற்றில் முறைகேடு நடந்துள்ளது என, புகார்கள் குவிந்து உள்ளன.அண்ணா பல்கலையில் நடந்துள்ளதாக கூறப்படும் புகார்களை பார்க்கையில், பாரதியின், 'நெஞ்சு பொறுக்குதில்லையே...' என்ற வரி தான், நினைவுக்கு வருகிறது.
அடிப்படை ஆதாரங்கள் உள்ளதால், சுரப்பா மீதான புகாரை விசாரிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் விசாரணை அதிகாரியாக இருப்பார் என்றும், மூன்று மாதங்களுக்குள் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வார் என்றும், அரசு தெரிவித்துள்ளது.

இந்த இமாலய ஊழல் புகார்கள் குறித்த விசாரணையை, உடனடியாக துவங்க வேண்டும். கால அவகாச நீடிப்பு கேட்கக் கூடாது. சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும், சட்டத்தின் பிடியில் நிறுத்த ஆவன செய்ய வேண்டும்.விசாரணை அதிகாரி கலையரசன், அதை செய்வார் என, நம்புவோம்.


'கொரோனா'வைவிட கொடியது!க.அருச்சுனன், செங்கல்பட்டிலிருந்து எழுதுகிறார்: 'கொரோனா' தொற்று நோயால், உலகமே அதிர்ந்து போய் உள்ளது. அந்நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க, விஞ்ஞானிகள் இரவு, பகல் பாராது பாடுபடுகின்றனர்.
கொரோனாவால், உலகளவில், 13 லட்சத்து, 50 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். கொரோனாவை போல், கொடிய கிருமி ஒன்று உள்ளது; அது தான், புகையிலை பொருள்.ஆண்டுதோறும், புகையிலை பயன்பாடு காரணமாக, 70 லட்சம் பேரும்; மறைமுக புகை சுவாசிப்போர், 12 லட்சம் பேரும் உயிரிழக்கின்றனர்.

இந்திய மக்கள் தொகையில், 28.6 சதவீதம் பேர், தற்போது புகையிலை பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் புகையிலை பயன்பாடு, 10 லட்சம் இந்தியர்களை கொல்கிறது.தற்போதைய நிலை தொடர்ந்தால், 2020ல் நிகழும் மொத்த இறப்புகளில், 13 சதவீதம் புகையிலையால் நிகழும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.கொரோனா காலத்திலும், புகை பிடிப்போர், அதை நிறுத்தவில்லை. நம் நாட்டில், புகையிலை நுகர்வு விகிதம், 30 சதவீதம் குறையும் என்ற, உலக சுகாதார அமைப்பின் இலக்குக்கு மாறாக, 21.6 சதவீதம் மட்டுமே குறைந்து வருகிறது.

தற்போது, நம் நாட்டில், புகையில்லா புகையிலை பயன்படுத்துவோர், 25 கோடி பேர்; புகை பிடிப்போர், 11 கோடி பேர் என, கணக்கிடப்பட்டுள்ளது.உலகின் அதிகமான இளைஞர்கள் புகைபிடிப்பதை துவங்குவதற்கான வாய்ப்பை, அது தொடர்பான விளம்பரங்கள் உருவாக்குவதாக, உலக சுகாதார அமைப்பின் ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியாவில், 1,000 பீடிகள் மீதான வரியை, 98 ரூபாயாக உயர்த்தினால், 3,690 கோடி ரூபாய், அரசுக்கு வருவாய் கிடைக்கும். 1,000 சிகரெட் மீதான வரியை, 3,691 ரூபாயாக உயர்த்தினால், 14 ஆயிரத்து, 630 கோடி ரூபாய் வரி வருவாய் ஏற்படும். இதனால், புகை பிடிப்பதால் இறப்போர் எண்ணிக்கையை பெருமளவு குறைக்கலாம். கொரோனாவைப் போல் புகையிலையும், கொடிய கிருமி என்பதை உணர்ந்து, அரசு விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.


இரண்டே தேர்தலில் காங்., காலி!


ஆர்.வித்யாசாகர், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய,
'இ - மெயில்' கடிதம்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை முறியடித்து, பீஹார் சட்டசபை தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி, மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது.மிகவும் பின் தங்கியிருந்த பீஹார் மாநிலத்தை, ஓரளவுக்காவது வளர்ச்சி அடையச் செய்தது, நிதிஷ் குமார் தான்.

பா.ஜ., அதிக இடங்களைப் பிடித்து இருந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறாமல், முதல்வர் பதவியை அவருக்கே விட்டுக் கொடுத்திருப்பது, வரவேற்கத்தக்கது.பா.ஜ., கூட்டணியின் வெற்றியை பொறுக்காத எதிர்க்கட்சியினர், வழக்கம்போல, 'ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்து விட்டது' என, கூக்குரலிடுகின்றனர். தி.மு.க., தலைவர் ஸ்டாலினும் அப்படி கூறியுள்ளார்.தங்கள் கட்சி வெற்றி பெற்றால், 'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' எனக் கூறி, தங்கள் கொள்கைக்கு அப்பாற்பட்ட மகேசனை துணைக்கு அழைப்பர்.

தோற்று விட்டால், 'ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் மோசடி; இந்த மக்கள், சோற்றால் அடித்த பிண்டங்கள்' என, பிதற்றுவர்.பீஹார் தேர்தலில், காங்கிரஸ் பரிதாபமாகத் தோற்றிருக்கிறது. ஒருகாலத்தில், நம் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் கோலோச்சிக் கொண்டிருந்த காங்கிரஸ், சோனியா மற்றும் ராகுலின் கைகளுக்கு சென்ற பின், காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் படிப்படியாக தேசியக் கட்சி என்ற அடையாளத்தை இழந்து, மாநிலக் கட்சியாக மாறி வருகிறது.தமிழகத்தை பொறுத்தவரையில், தி.மு.க., இல்லையென்றால், காங்கிரஸ் இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. தமிழகத்தில், தங்கள் கட்சியை வேரோடு பிடுங்கி எறிந்த, தி.மு.க.,விற்கு பல்லக்குத் துாக்கிகளாகத் தான், காங்கிரசார் இன்று வரை செயல்படுகின்றனர்.

மாற்றி யோசிக்கும் ஒருவர் கூட, அக்கட்சியின் மாநிலத் தலைவர் பதவியில் இதுவரை அமர வில்லை. அவர்களுக்கு, கட்சியின் கவுரவத்தை விட, பதவி தான் முக்கியம்.பதவியை விட்டுக் கொடுக்க மனமில்லாத சோனியா மற்றும் ராகுலிடம் இருந்து காங்கிரசைக் கைப்பற்றவில்லை யென்றால், இன்னும் இரண்டு தேர்தலுக்குள், அக்கட்சி இல்லாமல் போய் விடும்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
23-நவ-202011:17:45 IST Report Abuse
D.Ambujavalli இந்த ஓட்டுப்பதிவு ஏமாற்று பிரசினை அமெரிக்காவையும் விடவில்லை தோல்வியை ஏற்க மறுத்து அழிச்சாட்டியம் செய்யும் டிரம்ப் போலத்தான் இங்கும் எதிர்க்கட்சிகள் நடந்து KOLKINRANA1
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
23-நவ-202009:23:56 IST Report Abuse
Darmavan சுரப்பதை பற்றி தவறாக எழுதுபவனும் திருடனாக இருக்க வேண்டும்.
Rate this:
Cancel
gopalasamy N - CHENNAI,இந்தியா
23-நவ-202008:27:25 IST Report Abuse
gopalasamy N ஊழல் இல்லாவிடில் நேர்மையானவர்கள் கஷ்ட பட வேண்டியதுதான் அரசியல்வாதிகள் பல கோடி இழந்து உள்ளனர் மீண்டும் இவர் நியமனம் ஆனால் மேலும் பல கோடி நஷ்டம் என்ற பயம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X