பொது செய்தி

தமிழ்நாடு

போலி ஆவண எழுத்தர்கள் சார் - பதிவாளர்கள் புகார்

Added : நவ 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: பத்திரப்பதிவுக்கு வரும் பொது மக்களிடம், ஆவண எழுத்தர்கள் பெயரில், போலி நபர்கள் மோசடி செய்வதாக, சார் - பதிவாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.ஆதரவுதமிழகத்தில், சொத்து விற்பனை பத்திரப்பதிவு பணிகள், 'ஆன்லைன்' முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. இதில், பொது மக்கள் தாங்களே உரிய தகவல்களை உள்ளீடு செய்து, பத்திரப்பதிவுக்கு விண்ணப்பிக்கலாம்.ஆனால், பெரும்பாலானோர், சார்

சென்னை: பத்திரப்பதிவுக்கு வரும் பொது மக்களிடம், ஆவண எழுத்தர்கள் பெயரில், போலி நபர்கள் மோசடி செய்வதாக, சார் - பதிவாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆதரவுதமிழகத்தில், சொத்து விற்பனை பத்திரப்பதிவு பணிகள், 'ஆன்லைன்' முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. இதில், பொது மக்கள் தாங்களே உரிய தகவல்களை உள்ளீடு செய்து, பத்திரப்பதிவுக்கு விண்ணப்பிக்கலாம்.ஆனால், பெரும்பாலானோர், சார் பதிவாளர் அலுவலகங்களை ஒட்டியுள்ள ஆவண எழுத்தர் மையங்களையே நாடுகின்றனர். இதில், முறையாக உரிமம் பெற்று, 3,000 ஆவண எழுத்தர்கள் உள்ளனர்.தற்போது, உரிமம் இல்லாமல் பலரும், ஆவண எழுத்தர்களாக கடை திறந்துள்ளனர்.

இவர்கள், சார் - பதிவாளர் அலுவலகத்தில், கீழ நிலை பணியாளர்கள் ஆதரவுடனும், சில இடங்களில் சார் - பதிவாளர்கள் ஆதரவுடனும் செயல்படுகின்றனர்.இதுகுறித்து, சார் பதிவாளர்கள் கூறியதாவது:முறையான உரிமம் இன்றி, சிலர் ஆவண எழுத்தர்கள் என்ற பெயரில், கடைகள் திறக்கின்றனர். இவர்கள், பத்திரப்பதிவுக்கு வரும் மக்களுக்கு, தவறான தகவல்களை கொடுத்து, மோசடியில் ஈடுபடுகின்றனர்.நடவடிக்கைஒரு பத்திரம் பதிவு செய்ய, 10 ஆயிரம் முதல், 20 ஆயிரம் ரூபாய் வரையிலான தொகையை, சார் - பதிவாளர்களுக்கு கொடுப்பதாக கூறி வசூலிக்கின்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சார் - பதிவாளர்கள் மீது, பொய் புகார் அளித்து பிரச்னை செய்கின்றனர்.சார் - பதிவாளர்கள், ஆவண எழுத்தர்கள் பெயரில், மக்களை மோசடி செய்யும், இத்தகைய நபர்களை ஒடுக்க, பதிவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், பொது மக்கள், முறையான உரிமம் இல்லாத ஆவண எழுத்தர்களை அணுகுவதையும், அவர்களிடம் பணம் கொடுப்பதையும் நிறுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-நவ-202006:33:09 IST Report Abuse
சூரியா இதற்கான காரணங்களைப் பார்ப்போம். 1. கணிணியில் பத்திரப்பதிவு விபரங்களைப் பதிவிடும் முறை மிகவும் கடினமாக உள்ளதால், ஏஜன்டுகளின் உதவியை நாட வேண்டி உள்ளது. ஏஜென்டுகள் மூலம் வராமல், தானே ஒருவர் கணினியில் பதிவு செய்து வந்தால், அவர் அலைக்கழிக்கப்படுகிறார். அடிக்கடி, லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள், பதிவு அலுவலகங்களை ரெய்டு செய்வதால், சார் பதிவாளர்கள் இது போன்ற ஏஜென்டுகள் உதவியுடன் வசூல் செய்கின்றனர் என்பதே, கண்கண்ட உண்மை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X