சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : நவ 23, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: இந்த கல்வியாண்டில், தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்புக்குரிய கட்டணத்தை, முழுமையாக ஏற்கும். மாணவமணிகளின் மருத்துவக் கனவும் நிச்சயமாக நிறைவேறும்.'டவுட்' தனபாலு: தேர்தலுக்கு இன்னும், ஐந்தாறு மாதங்கள் இருக்கிறது. இப்போதே, ஓட்டுகளை கவர, விதவிதமான, எந்த காலத்திலும் நிறைவேற்ற
 'டவுட்' தனபாலு

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: இந்த கல்வியாண்டில், தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்புக்குரிய கட்டணத்தை, முழுமையாக ஏற்கும். மாணவமணிகளின் மருத்துவக் கனவும் நிச்சயமாக நிறைவேறும்.

'டவுட்' தனபாலு: தேர்தலுக்கு இன்னும், ஐந்தாறு மாதங்கள் இருக்கிறது. இப்போதே, ஓட்டுகளை கவர, விதவிதமான, எந்த காலத்திலும் நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளை வழங்கும், தி.மு.க., தலைமை, வரும் நாட்களில், என்னவெல்லாம் சொல்லப் போகிறதோ என்ற, 'டவுட்' தமிழக மக்களுக்கு வந்து விட்டது. எனினும், அவை வெறும் அறிவிப்பாகத் தான் இருக்கும் என்பதிலும், அவர்களுக்கு, 'டவுட்'டே இல்லை!

பத்திரிகை செய்தி: தி.மு.க.,வில், 82, 73 வயதுக்காரர்களுக்கு, மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்படுவதால், அக்கட்சியில் திடீர் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. 'கட்சியில் இளைஞர்களுக்கு முன்னுரிமை தரப்படும்' என்றும், 'செயல்படாதவர்களை களையெடுப்பேன்' என்றும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசுகிறார். அவரது பேச்சுக்கு முரணாக, அவரது செயல்பாடுகள் உள்ளதாக, மதுரை மாவட்ட தி.மு.க.,வினர் புலம்புகின்றனர்.

'டவுட்' தனபாலு: தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, இப்போது, 67 வயதாகிறது. சில ஆண்டுகளுக்கு முன் வரை, அவர் தான் கட்சியின் இளைஞரணி செயலர். இப்போது இளைஞரணி செயலராக இருக்கும் ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு இப்போது, 42 வயதாகிறது. அவர்கள் இன்னமும் மனதளவில் இளைஞர்களாக இருப்பதால், 70, 80 வயதினருக்கு பதவிகள் வழங்கி, அழகு பார்க்கின்றனரோ என்ற, 'டவுட்' வருது!lll

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா: வாரிசு அரசியலை, பா.ஜ., படிப்படியாக ஒழித்து வந்துள்ளது. தமிழகத்திலும் அதை ஒழிப்போம். '2ஜி' உள்ளிட்ட பல்வேறு ஊழல்களை செய்த தி.மு.க.,வுக்கு, ஊழல் பற்றி பேச என்ன அருகதை உள்ளது. குடும்ப அரசியல் நடத்தி வரும் கட்சிகளுக்கு, மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர். தமிழகத்திலும், குடும்ப அரசியலுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்.

'டவுட்' தனபாலு: தி.மு.க., கூட்டணியில் உள்ள, காங்கிரசை மத்தியிலும்; தமிழகத்தில், தி.மு.க.,வையும், கொஞ்சம் கூட ஈவு, இரக்கம் இல்லாமல், வச்சு வாங்குகிறார், அமித் ஷா. இப்படி அனல் கக்குவதால் தான், அவரை, பா.ஜ.,வின் தலைவராக நீண்ட காலம் வைத்திருந்தனர் போலும். எனினும், தேர்தல் நேரத்தில், ஊழல் என்ற குற்றச்சாட்டு, தமிழகத்தில் எடுபடுமா என்பது, 'டவுட்' தான். ஏனெனில், எங்கும் நீக்கமற நிறைந்துள்ளதே அது!

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
23-நவ-202011:06:07 IST Report Abuse
D.Ambujavalli இவர்கள் கூட்டணி வைத்துள்ள கட்சியில் ஊழலே இல்லை வாரிசு அரசியலே இல்லாத suthanthira சுயம் பிராக்கசக் கட்சி
Rate this:
Cancel
Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா
23-நவ-202009:04:58 IST Report Abuse
Bharathi கட்சி ஏற்கும்னு சொல்லி கட்சிக்காரங்க தலையில கட்டிடுவாரு. அவங்க ஏமாந்த தொழிலதிபர்களை மிரட்டி வசூல் பண்ணிடுவாங்க. போட்டோவுக்கு போஸ் கொடுக்க மட்டும் சுடலை வந்திடுவார். இவங்க டெக்னீக் நமக்கு தெரியாதா?
Rate this:
Cancel
skandh - Chennai,இந்தியா
23-நவ-202008:21:05 IST Report Abuse
skandh கொலையும் தான் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X