தினமும் பல்லாயிரம் லிட்டர் குடிநீர் வீண்: சாக்கடையில் கலக்கும் அவலம்

Added : நவ 23, 2020
Share
Advertisement
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே பில்லுார் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள கசிவால், தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகிறது.காரமடை அருகே அத்திக்கடவு பகுதியில் உள்ள பவானி ஆற்றையொட்டிய பகுதியில் இருந்து, கவுண்டம்பாளையம், வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டத்துக்கான குடிநீர் பெறப்படுகிறது. இதற்காக, அப்பகுதியில் இருந்து ராட்சத குழாய் அமைத்து வீரபாண்டி,

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே பில்லுார் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள கசிவால், தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகிறது.காரமடை அருகே அத்திக்கடவு பகுதியில் உள்ள பவானி ஆற்றையொட்டிய பகுதியில் இருந்து, கவுண்டம்பாளையம், வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டத்துக்கான குடிநீர் பெறப்படுகிறது. இதற்காக, அப்பகுதியில் இருந்து ராட்சத குழாய் அமைத்து வீரபாண்டி, பெரியநாயக்கன்பாளையம், துடியலுார் வழியாக கவுண்டம்பாளையம், வடவள்ளிக்கு கொண்டு செல்லப்படுகிறது.குழாய் வரும் பாதையில், மேட்டுப்பாளையம் ரோடு, பெரியநாயக்கன்பாளையம் அருகே பில்லுார் குடிநீர் திட்ட பம்ப் ஹவுஸ் அருகே நெடுஞ்சாலைக்கு கீழே செல்லும் குழாயில், சில நாட்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் கசியத் தொடங்கியது.உடனடியாக சரி செய்யப்படாததால், கசிவு பெரிதாகி, தற்போது தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர், சாலைகளில் வழிந்தோடி சாக்கடையில் கலக்கிறது.கவுண்டம்பாளையம், வடவள்ளி கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் கூறுகையில்,' அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்ட காரணத்தால், குழாயில் அழுத்தம் அதிகமாகி, உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வெளியேறிக் கொண்டு இருக்கிறது. உடனடியாக நிறுத்தினால், குடிநீர் வினியோகிப்பில் சிக்கல் ஏற்படும். சிறிய வகையான கசிவுகளை சரி செய்ய குறிப்பிட்டநாள் ஒதுக்கப்படும். அப்போது, குழாய் இணைப்பில் ஏற்பட்ட உடைப்பு சரி செய்யப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X