பொது செய்தி

தமிழ்நாடு

திருச்சி ரோட்டில் மின் விளக்குகள் : விபத்துகளை தடுக்க உதவும் என எதிர்பார்ப்பு

Added : நவ 23, 2020
Share
Advertisement
சூலூர்:காங்கயம்பாளையத்தில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் ஊராட்சி சார்பில் திருச்சி ரோட்டில் மின் விளக்குகள் அமைக்கப் பட்டுள்ளன.சூலூர் அடுத்த திருச்சி ரோட்டில் காங்கயம்பாளையம் ஊராட்சி உள்ளது. இங்குள்ள அரசு பள்ளி அருகே உள்ள சந்திப்பில் அடிக்கடி விபத்துகள் நடந்தன. இதையடுத்து, விபத்துகளை தடுக்க உயர் கோபுர மின் விளக்கு மற்றும் ரோட்டின் சென்டர் மீடியனில் மின்

சூலூர்:காங்கயம்பாளையத்தில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் ஊராட்சி சார்பில் திருச்சி ரோட்டில் மின் விளக்குகள் அமைக்கப் பட்டுள்ளன.சூலூர் அடுத்த திருச்சி ரோட்டில் காங்கயம்பாளையம் ஊராட்சி உள்ளது. இங்குள்ள அரசு பள்ளி அருகே உள்ள சந்திப்பில் அடிக்கடி விபத்துகள் நடந்தன. இதையடுத்து, விபத்துகளை தடுக்க உயர் கோபுர மின் விளக்கு மற்றும் ரோட்டின் சென்டர் மீடியனில் மின் விளக்குகள் அமைக்கவும் ஊராட்சி நிர்வாகம் முடிவு செயத்து.ஊராட்சி நிதியில் இருந்து 9.50 லட்சம் ரூபாய் செலவில், எட்டு மின் விளக்குகள், திருச்சி ரோடும் ஊராட்சி ரோடுகளும் சந்திக்கும் இடத்தில் உயர் கோபுர மின் விளக்கு மற்றும் கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கப்பட்டன.ஊராட்சி தலைவர் கந்தசாமி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ., கந்தசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி அசோகன், ஒன்றிய சேர்மன் மாதப்பூர் பாலு, லயன் கிளப் தலைவர் கருணாநிதி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று மின் விளக்குகளை இயக்கி வைத்தனர்.ஊராட்சி தலைவர் கந்தசாமி கூறுகையில், ''திருச்சி ரோட்டில் விபத்துகளை தவிர்க்க, தடுப்புகள் வைக்கப்பட்டன. அதிகமாக கல், மணல் ஏற்றி வரும் லாரிகளில் இருந்து அவை ரோட்டில் சிதறுவதால் விபத்துகள் நடந்தன. லாரிகளில் அளவுக்கு அதிமாக லோடு ஏற்றியும் வேகமாகவும் வர வேண்டாம் என, வலியுறுத்தி வருகிறோம். அடுத்த கட்டமாக மின் விளக்குகளை அமைத்துள்ளோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X