விபத்தில் சிக்கிய வாலிபர் சிகிச்சை பலனின்றி பலி

Added : நவ 23, 2020
Share
Advertisement
வில்லியனுார் : வில்லியனுார் அருகே பைக் வேகமாக ஓட்டிச் சென்று விபத்தில் சிக்கி படுகாயமடைந்த வாலிபர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.வில்லியனுார் அடுத்த அரியூர் பாரதி நகரை சேர்ந்தவர் லோகநாதன் மகன் ஷாம்குமார்,21; இவர் கடந்த 13ம் தேதி இரவு 10:30 மணிக்கு பிஒய்-01-டிடபுள்யூ-2776 பதிவெண் கொண்ட கேடிஎம் பைக்கில் தனது நண்பர் வைரவநாதனுடன் வில்லியனுார் நோக்கி வந்து கொண்டிருந்தார்.வடமங்கலம்

வில்லியனுார் : வில்லியனுார் அருகே பைக் வேகமாக ஓட்டிச் சென்று விபத்தில் சிக்கி படுகாயமடைந்த வாலிபர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.

வில்லியனுார் அடுத்த அரியூர் பாரதி நகரை சேர்ந்தவர் லோகநாதன் மகன் ஷாம்குமார்,21; இவர் கடந்த 13ம் தேதி இரவு 10:30 மணிக்கு பிஒய்-01-டிடபுள்யூ-2776 பதிவெண் கொண்ட கேடிஎம் பைக்கில் தனது நண்பர் வைரவநாதனுடன் வில்லியனுார் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

வடமங்கலம் அருகே வந்தபோது, சாலையை கடக்க முயன்ற மங்கலம் கிராமத்தை சேர்ந்த பானி பூரி வியாபாரி ஞானசேகர்,48; மீது மோதியது. அதில் துாக்கி வீசப்பட்ட ஞானசேகர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

பயத்தில் ஷாம்குமார், பைக்கை வேகமாக ஓட்டிச் சென்றபோது, பைக் கட்டுப்பாட்டை இழந்து, வடமங்கலத்தில் உள்ள பழைய குடிநீர் டேங்க் மதில் சுவர் மீது மோதியது.அதில் பைக் ஓட்டிச் சென்ற ஷாம்குமார் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். பின்னால் அமர்ந்து சென்ற வைரவநாதன் லேசான காயத்துடன் தப்பினார்.

படுகாயமடைந்த ஷாம்குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த ஷாம்குமார் நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதுகுறித்து வில்லியனுார் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X