காட்டு யானைகளால் பயிர் நாசம்: விவசாயிகள் கண்ணீர்

Added : நவ 23, 2020
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:யானைகளின் தொல்லையால், வெள்ளியங்காடு, ஆதிமாதையனூர் கிராமங்களில் காட்டு யானைகள் பயிர்களை நாசம் செய்வதால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.காரமடை அடுத்த வெள்ளியங்காடு, ஆதிமாதையனூர், சுண்டக்கரைப்புதூர் ஆகிய பகுதிகளில், கடந்த ஒரு மாதமாக காட்டு யானைகளின் தொல்லை, அதிகரித்துள்ளது. கிணற்றுத் தண்ணீரை நம்பி இந்த கிராம விவசாயிகள் வாழை பயிர்

மேட்டுப்பாளையம்:யானைகளின் தொல்லையால், வெள்ளியங்காடு, ஆதிமாதையனூர் கிராமங்களில் காட்டு யானைகள் பயிர்களை நாசம் செய்வதால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.காரமடை அடுத்த வெள்ளியங்காடு, ஆதிமாதையனூர், சுண்டக்கரைப்புதூர் ஆகிய பகுதிகளில், கடந்த ஒரு மாதமாக காட்டு யானைகளின் தொல்லை, அதிகரித்துள்ளது. கிணற்றுத் தண்ணீரை நம்பி இந்த கிராம விவசாயிகள் வாழை பயிர் செய்துள்ளனர். அறுவடைக்கு தயார் நிலையில் இருக்கும் போது, யானைகள் வாழை மரங்களை சேதம் செய்வதால், விவசாயிகளின் ஒட்டுமொத்த உழைப்பு வீணாகிறது.தமிழக விவசாயிகள் சங்க, மாநில பொதுச்செயலாளர் வேணுகோபால், தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:வெள்ளியங்காடு அடுத்த சுண்டக்கரைப்புதூர் பகுதியில், பத்திரப்பன் தோட்டத்தில், ஏழு யானைகள் புகுந்து, 300-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதம் செய்துள்ளன. போர்வெல் பைப்புகளை உடைத்து, சேதம் செய்துள்ளன.வெள்ளியங்காட்டில் சவுந்தரராஜ் தோட்டத்தில், யானைகள், 100 தென்னங்கன்றுகளை சேதப்படுத்தியது. வனத்துறையினர் யானைகளை விரட்டிய போதும், தோட்டத்திலிருந்து செல்லாமல், தென்னையும், வாழையும் சேதம் செய்துள்ளன.பெரும்பாலான விவசாயிகள் கடன் பெற்று விவசாயம் செய்கின்றனர். ஒரு மாதத்தில் அறுவடைக்கு தயார் நிலையில் இருக்கும் வாழைகளை, யானைகள் அழித்து சேதம் செய்கின்றன. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கிறது.தோட்டத்தைச் சுற்றி சோலார் மின்வேலி அமைத்தால், யானைகள் மரத்தை உடைத்து, மின்வேலி மீது போட்டு, அதன் வழியாக உள்ளே சென்று பயிர்களை சேதம் செய்கின்றன. மின் கம்பியில் யானைகள் சிக்கி இறக்க நேர்ந்தால், வனத்துறையினர் விவசாயிகளை கைது செய்கின்றனர். மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டு விடுகிறது.இதற்கு மட்டும் வனத்துறையினர், உடனடியாக நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட விவசாயிகளை கைது செய்கின்றனர். ஆனால் சேதமடைந்த பயிர்களுக்கு உடனடியாக இழப்பீட்டு தொகை வழங்குவதில்லை.வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் வராமல் இருக்க, அகழி தோண்ட வேண்டும். அதோடு இரவு நேரங்களில், வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு, யானைகள் வருவதை கட்டுப்படுத்த வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X