பொது செய்தி

தமிழ்நாடு

சாலை விரிவாக்கத்துக்காக வழிபாட்டு தலங்கள் அகற்றம்

Added : நவ 23, 2020
Share
Advertisement
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ்காலனி கோவை மேட்டுப்பாளையம் மெயின் ரோட்டில், சாலை விரிவாக்கத்துக்காக இடையூறாக இருந்த இரண்டு வழிபாட்டு தலங்களை வருவாய்த்துறையினர் அகற்றினர்.பிரஸ்காலனி அருகே சாலையின் இருபுறமும் இரண்டு வழிபாட்டு தலங்கள் இருந்தன. இவை சாலை விரிவாக்கத்துக்காக அகற்றப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இது தொடர்பாக வருவாய் மற்றும் நெடுஞ்சாலை

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ்காலனி கோவை மேட்டுப்பாளையம் மெயின் ரோட்டில், சாலை விரிவாக்கத்துக்காக இடையூறாக இருந்த இரண்டு வழிபாட்டு தலங்களை வருவாய்த்துறையினர் அகற்றினர்.பிரஸ்காலனி அருகே சாலையின் இருபுறமும் இரண்டு வழிபாட்டு தலங்கள் இருந்தன. இவை சாலை விரிவாக்கத்துக்காக அகற்றப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இது தொடர்பாக வருவாய் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் இரண்டு வழிபாட்டு தல நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினர்.நேற்று முன்தினம், கோவை வடக்கு ஆர்.டி.ஓ., சுரேஷ், பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி., கிருஷ்ணமூர்த்தி, வடக்கு தாசில்தார் மகேஷ்குமார், ஆர்.ஐ., நூர் முகமது, பெரியநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் பிருத்திவிராஜ் ஆகியோர் தலைமையில், 2 வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில், ஒரே நேரத்தில் இரண்டு வழிபாட்டு தலங்களும் இடித்து அகற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X