பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர உதவி

Added : நவ 23, 2020
Share
Advertisement
பெ.நா.பாளையம்:துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கோவில்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து, தமிழக அரசின், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர, தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிக்கு தலா, 2 லட்ச ரூபாய்க்கான காசோலைகளை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி வழங்கினார்.அசோகபுரம் மேல்நிலைப்பள்ளி மாணவர் கோகுல், தூத்துக்குடி அரசு

பெ.நா.பாளையம்:துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கோவில்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து, தமிழக அரசின், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர, தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிக்கு தலா, 2 லட்ச ரூபாய்க்கான காசோலைகளை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி வழங்கினார்.அசோகபுரம் மேல்நிலைப்பள்ளி மாணவர் கோகுல், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியிலும், கோவில்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஜீவா திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியிலும் சேர்ந்து உள்ளனர். இவர்கள் இருவருக்கும் தலா, 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி வழங்கினார். நிகழ்ச்சியில், கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி, ஊராட்சி தலைவர்கள் ரமேஷ், ரவி, ரங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X