பொது செய்தி

தமிழ்நாடு

பசுமைக்கு திரும்பியது பாலமலை! சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

Added : நவ 23, 2020
Share
Advertisement
பெ.நா.பாளையம்:சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை இயற்கை எழில் சூழ்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது. இதனால் பாலமலைக்கு வரும் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.நாயக்கன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பாலமலை, பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து, 10 கி.மீ., தொலைவில் மலை மீது உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின்

பெ.நா.பாளையம்:சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை இயற்கை எழில் சூழ்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது. இதனால் பாலமலைக்கு வரும் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
நாயக்கன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பாலமலை, பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து, 10 கி.மீ., தொலைவில் மலை மீது உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் மடியில் உள்ள பாலமலையில் ரங்கநாதர், பூதேவி, ஸ்ரீதேவியுடன் அருள்பாலித்து வருகிறார்.சில ஆண்டுகளாக, இப்பகுதியில் போதிய அளவு மழை பெய்யாததால், மரம், செடி, கொடிகள் காய்ந்து அழகு இழந்து காணப்பட்டன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், பாலமலை வட்டாரத்தில் உள்ள மலைக்கிராமங்கள், அழகிய தோற்றத்துக்கு திரும்பியுள்ளன. திரும்பிய இடமெல்லாம் தென்படும் அழகிய புல்வெளி, கண்களை கவரும் வகையில் உள்ளது.பாலமலை கோவிலைச் சுற்றியும், பெரும்பதி, பெருக்கைப்பதி, குஞ்சூர்பதி, பசுமணி, பசுமணிபுதுார், மாங்குழி உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு ஆடு, மாடு வளர்த்தல் பிரதான தொழிலாக உள்ளது.
இந்தாண்டு ஓரளவு மழை பெய்துள்ளதால், அவரை, துவரை, கம்பு உள்ளிட்டவைகளை பயிரிட பழங்குடியின மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.தற்போது, பாலமலை கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. பாலமலை அழகை ரசிக்க வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும்யும் அதிகரித்துள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் கோவனுார் மலை அடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்ல ஜீப் வசதி செய்யப்பட்டுள்ளது. காலை முதல் மாலை ஜீப் இயங்குகிறது. மலைஅடிவாரத்தில் இருந்து தார்ரோடு வசதி இருப்பதால், இரு சக்கர வாகனத்திலும் செல்லலாம்.தற்போது பாலமலைக்கு செல்லும் பாதை மழை நீர் அரிப்பால் ஆங்காங்கே பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கவனத்துடன் செல்வது அவசியம்.கோவில் அருகே உள்ள மண்டபத்தில் மதியம் இலவச அன்னதானம் தினந்தோறும் நடக்கிறது. காலையில் சென்று பாலமலை மற்றும் மலைக்கிராமங்களை பார்த்துவிட்டு, மாலையில் வீடு திரும்பலாம் என்பதால், ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X