அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: இரண்டே தேர்தலில் காங்., காலி

Updated : நவ 23, 2020 | Added : நவ 23, 2020 | கருத்துகள் (37)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :ஆர்.வித்யாசாகர், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்.தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை முறியடித்து, பீஹார் சட்டசபை தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி, மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது.மிகவும் பின் தங்கியிருந்த பீஹார் மாநிலத்தை, ஓரளவுக்காவது

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :ஆர்.வித்யாசாகர், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்.



latest tamil news



தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை முறியடித்து, பீஹார் சட்டசபை தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி, மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது.மிகவும் பின் தங்கியிருந்த பீஹார் மாநிலத்தை, ஓரளவுக்காவது வளர்ச்சி அடையச் செய்தது, நிதிஷ் குமார் தான்.

பா.ஜ., அதிக இடங்களைப் பிடித்து இருந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறாமல், முதல்வர் பதவியை அவருக்கே விட்டுக் கொடுத்திருப்பது, வரவேற்கத்தக்கது.பா.ஜ., கூட்டணியின் வெற்றியை பொறுக்காத எதிர்க்கட்சியினர், வழக்கம்போல, 'ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்து விட்டது' என, கூக்குரலிடுகின்றனர். தி.மு.க., தலைவர் ஸ்டாலினும் அப்படி கூறியுள்ளார்.தங்கள் கட்சி வெற்றி பெற்றால், 'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' எனக் கூறி, தங்கள் கொள்கைக்கு அப்பாற்பட்ட மகேசனை துணைக்கு அழைப்பர். தோற்று விட்டால், 'ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் மோசடி; இந்த மக்கள், சோற்றால் அடித்த பிண்டங்கள்' என, பிதற்றுவர்.


latest tamil news


பீஹார் தேர்தலில், காங்கிரஸ் பரிதாபமாகத் தோற்றிருக்கிறது. ஒருகாலத்தில், நம் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் கோலோச்சிக் கொண்டிருந்த காங்கிரஸ், சோனியா மற்றும் ராகுலின் கைகளுக்கு சென்ற பின், காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் படிப்படியாக தேசியக் கட்சி என்ற அடையாளத்தை இழந்து, மாநிலக் கட்சியாக மாறி வருகிறது.தமிழகத்தை பொறுத்தவரையில், தி.மு.க., இல்லையென்றால், காங்கிரஸ் இல்லை என்ற நிலை உருவாகி விட்டது.

தமிழகத்தில், தங்கள் கட்சியை வேரோடு பிடுங்கி எறிந்த, தி.மு.க.,விற்கு பல்லக்குத் துாக்கிகளாகத் தான், காங்கிரசார் இன்று வரை செயல்படுகின்றனர். மாற்றி யோசிக்கும் ஒருவர் கூட, அக்கட்சியின் மாநிலத் தலைவர் பதவியில் இதுவரை அமரவில்லை. அவர்களுக்கு, கட்சியின் கவுரவத்தை விட, பதவி தான் முக்கியம்.பதவியை விட்டுக் கொடுக்க மனமில்லாத சோனியா மற்றும் ராகுலிடம் இருந்து காங்கிரசைக் கைப்பற்றவில்லையென்றால், இன்னும் இரண்டு தேர்தலுக்குள், அக்கட்சி இல்லாமல் போய் விடும்.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
23-நவ-202020:06:27 IST Report Abuse
கொக்கி குமாரு ராகுல் பேசுவதை சோனியா அவர்கள் ஒரு விஞ்ஞானி பேசுவதை கவனிப்பதைப் போல போஸ் கொடுப்பதால் என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை.
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
23-நவ-202018:34:14 IST Report Abuse
Nagarajan D இதுக மூணு நபர்களும் குடும்பத்தோடு 20 வருடங்கள் இந்தியாவை விட்டு (வனவாசம்) வெளிநாட்டு வாசம் சென்றால் காங்கிரஸ் கட்சி உருமாற வாய்ப்பு உள்ளது....
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
23-நவ-202017:09:11 IST Report Abuse
Endrum Indian சோனியா பப்பு பியங்கா துண்டை காணோம் துணியைக்காணோம் என்று ஓடினால் தங்கள் ரூ 90 லட்சம் கோடி சொத்தை பாதுகாக்க முடியும் இல்லையென்றால் அது கொஞ்சம் கொஞ்சமாக சட்டத்தினால் இந்திய அரசு கருவூலத்திற்கு சென்று விடும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X